Cream Section Separator

Ajith Kumar

ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது எப்படி?

எளிமை

எளிமைதான் அவரது வலிமை. பந்தா இல்லாமல் எல்லோரிடமும் பழகக்கூடிய தன்மை. 

மற்றவரை மதிக்கும் குணம்

ரசிகர்கள், வேலையாட்கள் மட்டுமல்ல பொதுமக்களிடம் அனைவருக்கும் மரியாதை கொடுப்பதில் அஜித்துக்கு நிகர் அவர்தான்.

துணிச்சல்

முதல்வர் மேடையில் அமர்ந்திருக்க, பலரும் பார்க்க, அவருடைய ஆட்கள் செய்யும் அடாவடித்தனத்தை முதல்வரிடமே எடுத்துக்கூறிய துணிச்சல் எல்லோராலும் பாராட்டப்பட்டது. 

விளம்பரத்தை விரும்பாமை

8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு சத்தமின்றி உதவி செய்துள்ளார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் மீதான அக்கறை

ஒருபோதும் தன் ரசிகர்களைச் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளாத குணம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

மனதிற்குப் பிடித்ததைச் செய்தல்

பைக், கார் ரேஸ், ஏரோ மாடலிங், துப்பாக்கி சுடுதல், புகைப்படம் எடுத்தல், சமையல், பயணம் என மனதைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்ளும் மகத்தான பண்பு அஜித்துக்கு வாய்த்திருக்கிறது.