திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் ₹45 லட்சம் மோசடி – 2 பேர் கைது முக்கிய குற்றவாளிக்கு போலீஸ் வலைவீச்சு

online scam

மும்பை: திருமணம் செய்வதாக கூறி ஒரு பெண்ணிடம் ₹45 லட்சம் மோசடி செய்த கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர் மேலும் முக்கிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மும்பை மாஹிம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் வரன் தேடி திருமண இணையத்தில் தனது விபரங்களை பதிவேற்றம் செய்திருந்தார். இவரைத் தொடர்பு கொண்ட ஒருவர் அமெரிக்கா நாட்டு பிரஜை என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது மனைவி சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் தனக்கு 6 வயது மகள் இருப்பதாகவும் திருமணம் செய்ய எனக்கு விருப்பம் என்று தெரிவித்தார். இதற்கு அப்பெண் திருமணத்திற்கு சம்மதித்து உள்ளார். சில நாள் கழித்து அந்த நபர் டெல்லிக்கு வந்திருப்பதாகவும் தன்னிடம் அதிக வெளிநாட்டு பணம் இருப்பதால் சுங்க வரித்துறை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விட்டதாகவும் தெரிவித்தார், மேலும் அதற்கான சுங்க வரி செலுத்தினால் பணத்தை விடுவித்து விடுவார்கள் என தெரிவித்தார்.

இதனை நம்பிய பெண் சுங்கவரி உள்பட பல்வேறு கட்டணங்கள் என மொத்தம் ரூ.45 லட்சத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு செலுத்தினார். இதன் பின்னர் அந்த நபரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது, இதனால் தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்தபெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி கும்பலை தேடி வந்தனர். மேலும் கும்பல் வைத்திருந்த வங்கி கணக்கு ஆய்வு நடத்தியபோது அது போலி ஆவணங்களை செலுத்தி வங்கி கணக்கைத் தொடங்கி இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த அசார் அன்சாரி (வயது 22) ராஜ்குமார் பாண்டே, (வயது 37) அண்டாப் ஹில்லில் பதுங்கி இருப்பது பொலீசாரின் தீவிர விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று இரண்டு பேரையும் கைது செய்தனர் மேலும் இந்த மோசடி கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளியான சுதாகா ரா என்பவர் தலைமறைவாகி விட்டார் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Source: Mumbai Today Tamil News

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *