ஓலா, உபேர் மற்றும் பிற டாக்சி ஓட்டுநர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மும்பை போக்குவரத்து போலீஸ் கமிஷனர் இடையே நேற்று சந்திப்பு நடைபெற்றது. மும்பை போலீஸ் கமிஷனரால் டாக்சி டிரைவர்கள் மீது ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்ட பின்னணியில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
டாக்சி ஓட்டுனர்கள், வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார். இந்த டாக்சி டிரைவர்களுக்கு போதிய ஸ்டாண்ட் இல்லாதது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் புதிய ஸ்டாண்டுகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளின் பட்டியலை போக்குவரத்து போலீசாரிடம் சமர்ப்பிக்குமாறும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.