புதுச்சேரியில் நடந்த விழாவில் இந்தியாவின் சிறந்த சாதனையாளர் விருதை மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த ரசிகர் நற்பணி மன்றத்தின் மாநில தலைவாடாக்டர் தளபதி எஸ்.கே. ஆதிமூலம் அவர்களுக்கு புதுவை முதலமைச்சர் வழங்கினார். பிரபஞ்ச எ.பி.ஜே. உணவு வங்கி 247 ஏடிஎம் எ.பி.ஜே.டைனாமிக் பவுண்டேஷன், அமுதசுரபி மற்றும் எ.பி.ஜே வி.ஐ.பி 2022 இணைந்து உலகெங்கும் சமூக சேவையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை தேர்வு செய்து ஊக்கப் படுத்தும் வகையில் 2022 இவ்வாண்டும் பல்வேறு தலைப்பில் விருது வழங்கும் விழா புதுவை மாநிலம் அண்ணாமலை இண்டர்நேஷனல் ஹோட்டலில் வைத்து நடைப்பெற்றது விழாவிறகு வருகை தந்த அனைவரையும் டாக்டர் எஸ்.லஷமி பிரபா மற்றும் அமைப்பு நிறுவன தலைவர் டாக்டர் ஏபிஜே சலீம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இவ்விழாவின் முதன்மை விருதாக இந்தியா சிறந்த சாதனையாளர் விருது கடந்த 33- வருடங்களாக சாதி மதம் இனம் மொழி ஏற்றத் தாழ்வு மனப்பானமையின்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற்று இருக்கவும், நான் யாரையும் அடிமை படுத்த மாட்டேன் நான் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன், நம் பிறவியே இல்லாதவருக்கு இயன்ற வரை, இறுதி வரை, நன்மை பயக்கும் அர்ப்பணிப்பு தான் என்ற உயரிய சிந்தனையும், செயலும் இன்று வரை நீடிப்பதாலே தொடர்ந்து 25 விருதுகள் பலவேறு மாநிலங்களில் பெற்று 26-வது விருதாக இந்தியாவின சிறந்த சாதனையாளா விருது புதுவை மாநில முதலமைச்சர் என்ரங்கசாமி மற்றும் இந்தியாவின் பல ஜனாதிபதிகளிடம் உயரிய விருது பெற்ற பதமஸ்ரீ விஜயகுமார் ஆகியோரின் பொற்கரங்களால் மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த ரசிகர் நற்பணி மன்றம் மாநில தலைவர் டாக்டர் தளபதி எஸ். கே ஆதிமூலம் அவர்கள் பெற்றது சிறப்புக்குரியது. இது குறித்து மஹாராஷ்டிரா மாநில தலைமை ரஜினிகாந்த ரசிகா நற்பணி மன்றம் மாநில மகளிரணி தலைவி தலைமை ஆசிரியை லதா மணிமாறன் மாநில இணை செயலாளர் எம். மரிய சிலுவை மாநில அமைப்பாளா கவிஞர் பி. முருகானந்தம் மாநில இளைஞரணி தலைவா ரஜினி தனவேல் நாதன் மாநில துணை செயலாளர்கள் டி.கே. ரஜினி மூர்த்தி, சதிஷ் ராமராஜ. சி.வேல்முருகன், சார்ஜா சுவாமி நாதன், எம்.நம்பிராஜன, டி தண்டாபாணி, உட்பட நிர்வாகிகள் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.