[ad_1]
சென்னை: மூன்று மொழிகளில் வெளியாகும் ‛மாமனிதன்’ திரைப்படம் ஜூன் 24ம் தேதி இறுதியாக வெளியாகிறது. பல முறை ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் வெள்ளித் திரைகளில் வெளியாகிறது.
விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று திரைப்ப்டத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனு ராமசாமி. பிறகு அவர், விஜய் சேதுபதியுடன் இணைந்து தர்மதுரை, இடம் பொருள் ஏவல் பணியாற்றிய நிலையில், இந்த இருவர் கூட்டணியில் உருவான அண்மைத் திரைப்படம் மாமனிதன்.
தர்மதுரை படம் வெளியாகி வெற்றி பெற்றது. ஆனால் இடம் பொருள் ஏவல் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்தச் சூழலில் விஜய் சேதுபதியை வைத்து சீனுராமசாமி மாமனிதன் இன்னும் சில நாட்களில் வெளியாகிறது.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கும் மாமனிதன் திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
2019ஆம் ஆண்டே திரைப்படத்தின் முழு பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருந்தாலும், கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்தத் திரைப்படத்தை வெளியிடும் உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் வாங்கியிருக்கிறார்.
திரைப்பட ரிலீஸ் தொடர்பாக நடைபெற்ற நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, கதாநாயகி காயத்ரி, திரைப்பட விநியோக உரிமையை வாங்கியிருக்கும் சுரேஷ் என திரைப்படக் குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர்.
“மாமனிதன் படத்தில் ராதாகிருஷ்ணன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரில் பாதி பெயரை வாங்க வேண்டும் என சிவாஜி வீட்டு வாசலில் உள்ள விநாயகர் கோயிலில் வேண்டிக் கொண்டேன்” என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்தார்.
தமிழ் சினிமாவின் மூத்த மாமனிதர்களுக்கு , தனது “மாமனிதன்” திரைப்படம் வெளியாவதையொட்டி மலர் மரியாதை செய்தார் இயக்குனர் சீனு ராமசாமி..
‘மாமனிதன்’ படத்திற்காக காயத்ரிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்த நிலையில், காயத்ரியின் நடிப்புத் திறமைக்கு இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று விஜய் சேதுபதி வருத்தம் தெரிவித்தார்.
ஆனால் இந்தப் படம் காயத்ரிக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரும் என்று கதாநாயகன் விஜய் சேதுபதி தெரிவித்தார்.
மேக்கப்பே இல்லாமல் நடித்ததாக கூறிய நடிகை காயத்ரி, புருவங்களைக் கூட சீரமைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டது முதலில் கஷ்டமாக இருந்தாலும், படப்பிடிப்பின்போதுதான் அதன் முக்கியத்துவம் தெரிந்ததாக தெரிவித்தார்.