[ad_1]
ஜி.எஸ்.டி. அறிமுகம் ஆனதால், தடைகள் குறைந்து, வணிகம் செய்வது எளிதாகி இருப்பதாக, இந்திய தொழில்துறை தலைவர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்து உள்ளனர்.
சர்வதேச அளவில் தொழில்முறை சேவைகளை வழங்கி வரும் ‘டெலாய்ட்’ நிறுவனம், ஜி.எஸ்.டி., குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.இந்த ஆய்வில் கலந்துகொண்ட இந்திய தொழில்துறை தலைவர்களில் 90 சதவீதம், பேர் ஜி.எஸ்.டி., அறிமுகம் செய்யப்பட்ட காரணத்தினால், இதுவரை இருந்த பல தடைகள் குறைந்து, எளிதாக வணிகம் செய்ய முடிவதாக தெரிவித்து உள்ளனர்.
ஜி.எஸ்.டி. அறிமுகம் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் சாதகமான பாதிப்பையே ஏற்படுத்தி உள்ளது என்றும், நிறுவனங்கள் தங்களுடைய வினியோக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உதவி இருப்பதாக, அவர்கள் ஆய்வில் தெரிவித்து உள்ளனர்.சிறந்த பலன்களை தரும் வகையில், தானியங்கி முறையில் வரிசெலுத்துவது மற்றும் ‘இ–இன்வாய்சிங், இ-வே பில்’ ஆகியவை அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும், ஆய்வில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன
‘ஒரு நாடு; ஒரு வரி’ என்ற சீர்திருத்தம், எளிதாக தொழில் துவங்கும் வாய்ப்பை அளித்துள்ளது. வரி செலுத்துபவர்களுக்கும் தொழில் செய்பவர்களுக்கும் மிகவும் பயன் தரத்தக்கதாக இருக்கிறது என்றும் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.