ஐரோப்பிய ஒன்றியத்தின் நுகர்வோர் நல சட்டங்களை ஏற்க வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு கால அவகாசம்

whatsapp 1

[ad_1]

மெடா நிறுவனம் நடத்தி வரும் வாட்ஸ்அப் தளத்திற்கான தனியுரிமை கொள்கைகளை கடந்த ஜனவரி மாதத்தில் அப்டேட் செய்யப்பட்டன. இந்நிலையில், ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நுகர்வோர் நல அமைப்புகள் சார்பில் இது தொடர்பான கவலைகள் முன்வைக்கப்பட்டன. இத்தகைய சூழலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நுகர்வோர் நல சட்டங்களை குறிப்பிட்ட கால வரையறைக்குள் வாட்ஸ் அப் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் கடந்த புதன்கிழமை கெடு விதித்தது.ஐரோப்பிய நுகர்வோர் அமைப்பு மற்றும் ஐரோப்பிய நுகர்வோர் அமைப்புகளின் நெட்வொர்க் ஆகியவை முன்வைத்த புகாரில், தனியுரிமை கொள்கையில் செய்யப்பட்ட அப்டேட் குறித்து வாட்ஸ் அப் போதுமான விளக்கத்தை தரவில்லை என்ற புகாரை முன்வைத்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நுகர்வோர் சட்டங்களை அது மீறுவதாக உள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

அதே சமயம், ஐரோப்பிய ஒன்றியத்தின் நுகர்வோர் நல சட்டங்களை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தேசிய அமலாக்க அமைப்புகளுக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது. இந்த தேசிய நுகர்வோர் அமைப்பின் கண்காணிப்பாளர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தான் ஐரோப்பிய நுகர்வோர் பாதுகாப்பு ஒத்துழைப்பு நெட்வொர்க்கில் இருக்கின்றனர். இந்த அமைப்பு சார்பில், அப்டேட் செய்யப்பட்ட தனியுரிமை கொள்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

வாட்ஸ் அப் அளித்த பதிலில் திருப்தி இல்லை

தனியுரிமை கொள்கை அப்டேட் தொடர்பாக ஐரோப்பிய நுகர்வோர் பாதுகாப்பு ஒத்துழைப்பு நெட்வொர்க் அனுப்பி வைத்த கடிதத்திற்கு வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் பதில் அளித்தது. ஆனால், அவர்கள் அனுப்பிய பதில் திருப்திகரமானதாக இல்லை என்று அந்த நெட்வொர்க் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தனியுரிமை கொள்கை அப்டேட் தொடர்பாக மீண்டும் விளக்கம் அளிக்குமாறு வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கடந்த புதன்கிழமை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்ன

வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பாக, நுகர்வோர் பாதுகாப்பு நெட்வொர்க் தலைவர் டீடியர் ரேயண்டர்ஸ் கூறுகையில், “தங்களுடைய தனி விவரங்களை வணிக ரீதியாக வாட்ஸ் அப் எந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்கிறது என்பதை பயனாளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும். குறிப்பாக, சர்வீஸ் பார்னர்களுக்கு வழங்கப்படும் டேட்டா குறித்த விவரங்களை தெரியப்படுத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்தக் கடிதத்திற்கு உரிய கால நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் அப்டேட் செய்யப்பட்ட கொள்கையில், பயனாளர்களின் டேட்டா விவரங்கள் பாதிக்கப்படும் அளவுக்கு எந்த மாற்றமும் செய்யவில்லை என்று வாட்ஸ் அப் தெரிவித்ஹ்டுள்ளது.

Source

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *