இந்திய நிறுவனங்களின் கிடுகிடு வளர்ச்சி முன்னிலை வகிக்கும் அதானி குழுமம்

large 1655338489

மும்பை–கடந்த ஏப்ரல் வரையிலான ஆறு மாத காலத்தில், அதானி குழுமத்தின் மதிப்பு 88.1 சதவீதம் உயர்ந்து, 17.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

‘ஹுருன் இந்தியா’ நிறுவனத்தின் ‘பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500’ தரவரிசை ஆய்வில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆய்வில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது: கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மதிப்பு, ஏப்ரல் வரையிலான ஆறு மாத காலத்தில் 88.1 சதவீதம் உயர்ந்து, 17.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ 13.4 சதவீத உயர்வுடன், 18.87 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ மதிப்பு 0.9 சதவீதம் குறைந்து, 12.97 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதானி குழுமத்தை பொறுத்தவரை, ‘அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவனத்தின் மதிப்பு, மிக வேகமாக 139 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, 4.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

இதையடுத்து, இந்நிறுவனம் ஆறு மாதங்களுக்கு முன் 16 வது இடத்தில் இருந்தது, தற்போது ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. ‘அதானி வில்மார்’ நிறுவனம், கிட்டத்தட்ட 190 சதவீத வளர்ச்சியை கண்டிருக்கிறது. இதன் மதிப்பு 66 ஆயிரத்து 427 கோடி ரூபாய்.  ‘அதானி பவர்’ 157.8 சதவீத வளர்ச்சியுடன், 66 ஆயிரத்து 185 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட தாக உயர்ந்துள்ளது. மொத்தத்தில், அதானி குழுமம் 88.1 சதவீத வளர்ச்சியை, கடந்த ஆறு மாதங்களில் கண்டுள்ளது. இந்தியாவின் 500 நிறுவனங்களின் மொத்த வளர்ச்சி, 2 சதவீதம் உயர்ந்து 232 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது ஆறு மாதங்களுக்கு முன் 221 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களில், ‘தேசிய பங்குச் சந்தை’ 35.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக உயர்ந்துள்ளது.  ‘சீரம் இன்ஸ்ட்டிடியூட்’ 4.6 சதவீத வளர்ச்சி பெற்று, 1.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் உள்ளது. பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் 17.9 சதவீதம் சரிவுகண்டு, 34 வது இடத்தில் இருந்தது, 184வது இடத்துக்கு இறங்கி விட்டது.

மிக அதிக வளர்ச்சி கண்டது ‘வேதாந்த் பேஷன்ஸ்’ நிறுவனம். இது 313.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த 500 நிறுவனங்கள்கொண்ட பட்டியலில், குறைந்தபட்சம் 5,800 கோடி ரூபாய் மதிப்பு கொண்டநிறுவனங்களே இடம்பெற்றுள்ளன.இந்திய நிறுவனங்கள் பல தாக்கங்களை எதிர்கொண்டு, உலகளாவிய சக நிறுவனங்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன. இது, இந்தியபொருளாதாரத்தின் உள்ளார்ந்த வலிமையையும், ஆழத்தையும் காட்டுகிறது.அனஸ் ரஹ்மான் ஜுனைடுதலைமை ஆராய்ச்சியாளர், ஹுருன் இந்தியா

நன்றி

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *