மகாராஷ்டிரா மாநிலம் புனே நாராயண காவ் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த எட்டு வங்கதேச நாட்டினரை கடந்த டிசம்பர் 14ஆம் தேதி அந்த மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இவர்கள், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் பெயர்கள் மெஹ்பூப் ஷேக், ரானா மண்டல், கஃபூர் ஷேக், அலாம்ஜீர் மண்டல், ஷலோம் மண்டல், அஃப்சல் கான், காபீர் முல்லா மற்றும் ஜமத் அலி மண்டல்.
விசாரணையின் போது, இந்த சட்டவிரோத குடியிருப்பாளர்கள் நாராயண காவ் பகுதியில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்ததாக தெரியவந்துள்ளது. சட்டவிரோத வங்கதேச குடியேற்றங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் புனே நகரம் பாதுகாப்பற்றதாக மாறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னர், NIA மற்றும் மாநில காவல்துறை கூட்டணி புனே மற்றும் தானே பகுதிகளில் சோதனை நடத்தி, ISIS சித்தாந்தத்தை பரப்பிட்ட 15 நபர்களை கைது செய்திருந்தது. இது தொடர்பாக, கொண்ட்வாவில் இருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். மூன்று மாதங்களுக்கு முன்னர், புனே புதாவர்த் பெத்தில் உள்ள விபச்சார விடுதியில் சோதனை நடத்தி, வங்கதேச பெண்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளை சட்டவிரோத குடியிருப்பு குற்றத்தின் கீழ் கைது செய்திருந்தது காவல்துறை.
CINEMA NEWS
நடிக நடிகையருக்கு அதிக பணம் தரமாட்டேன்! – விட்டலாச்சார்யா