ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய மக்களை அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மக்கள் தொகை முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் கூறினார்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை சரிவு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. ரஷ்யாவும் இப்போது மக்கள் தொகை சரிவால் பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளது. உக்ரைன் போரால் ரஷ்யாவில் பலர் கொல்லப்பட்டதும் இதற்கு ஒரு காரணம்.
PEOPLE ALSO READ
வெளிநாடு சென்ற கணவர், தனிமையை தாங்க முடியாமல் உயிரை மாய்த்த மனைவி!
மக்கள் தொகையை அதிகரிக்க புடின் சில யோசனைகளை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஒரு தம்பதி குறைந்தது மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.