[ad_1]
தொடர்ச்சியாக 12-வது நாளாக சரிந்த கிரிப்டோ கரன்சியான பிட்காயின் மதிப்பு. 17,600 அமெரிக்க டாலர்களுக்கு கீழ் சென்ற மதிப்பு.
கிரிப்டோ கரன்சிகளில் மிகவும் பிரபலமான கரன்சியாக உள்ளது பிட்காயின். உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தொகையை பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் கிரிப்டோ கரன்சி முதலீடு சார்ந்த வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிட்காயின் மதிப்பு சரிந்துள்ளது. சனிக்கிழமை அன்று சுமார் 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 17,599 டாலர் என்ற மதிப்பை கண்டுள்ளது. இருந்தாலும் ஞாயிறு அன்று சரிவிலிருந்து பிட்காயின் மதிப்பு மீண்டதாக சிங்கப்பூரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் டெர்ரா பிளாக்செயினின் சரிவு மற்றும் செல்சியஸ் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் பிட்காயின் பரிவர்த்தனைகளை நிறுத்தியது இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்சியஸ் நிறுவனத்தின் வழியை மற்றொரு நிதி நிறுவனமும் பின்பற்றுள்ளதாக தெரிகிறது. இது டான் பிட்காயினின் திடீர் சரிவுக்கு பிரதான காரணம்.
கிரிப்டோ கரன்சியில் மற்றொரு வகையான ஈதர் 19 சதவீதம் சரிந்துள்ளது. கார்டானோ, சோலானா, டோக்காயின் மற்றும் போல்கடோட் ஆகியவை 12 முதல் 14 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர இன்னும் பிற கிரிப்டோ கரன்சி மதிப்புகளும் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.