மகாராஷ்டிரா: சிவாஜி நகரை சேர்ந்தவர் லீலாவதி தேவி பிரசாத், இவர்களது மகள் ப்ரீத்தி பிரசாத் (வயது 20) இவர் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு 17 வயதில் ஒரு தோழி உள்ளார். இந்த தோழியியும் இவர் வீட்டின் அருகாமையில் தான் வசித்து வருகிறார்.இந்நிலையில் ப்ரீத்தி பிரசாத், கடந்த 10ம் தேதி தனது வாட்ஸ் அப்பில்ஒரு ஸ்டேட்டஸ் வைத்து இருந்தார். இதைப்பார்த்த 17 வயது தோழி தன்னைப் பற்றி தான் இந்த ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டுள்ளதாக தன்னைத்தானே கூறியுள்ளார், இந்த ஸ்டேட்டஸ் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் அந்த 17 வயது தோழி கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 10-ம் தேதி தோழியின் தாய் மற்றும் 2 சகோதரர் சகோதரி ஆகியோர் லீலாவதியின் வீட்டுக்கு சென்றனர். பிரீத்தி வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி கேட்டு தகராறு செய்து உள்ளனர். மேலும் லீலாவதியை அவரது வீட்டில் இருந்த மற்றவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் லீலாவதியின் விலா எலும்பில் பலமாக அடிபட்டு உள் காயம் ஏற்பட்டுள்ளது. வலியில் அலறி துடித்த அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மறு நாள் இரவு லீலாவதி இறந்து விட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக லீலாவதியின் மகள் பிரீத்தி கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை வழக்கு பதிவு செய்த பொய்சர் போலீசார் லீலாவதியின் மகளின் பதினேழு வயது தோழியின் தாயார் உட்பட 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மூன்று பேரையும் 15ம்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே நிருபர்களுக்கு பேட்டி அளித்த லீலாவதியின் மகள் பிரீத்தி கூறுகையில் வாட்ஸ் அப்பில் தான் பொதுவான செய்தியை தான் வெளியிட்டதாகவும் தோழியை பற்றி குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரும் வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் வைத்து மகிழ்கின்றனர். அவ்வப்போது யாரெல்லாம் பார்த்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் விளையாட்டாகவும் ஆர்வக்கோளாறு அகவும் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இரு குடும்பத்தினர் இடையே பிரச்சனையை ஏற்படுத்தி ஒரு உயிரை பறித்துள்ளது என்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது.
Source: Mumbai Today Tamil News