சமையல் எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை அதிரடியாக உயர்வு

lpg

[ad_1]

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த சில ஆண்டுகளாகவே உயர்ந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி வந்தாலே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எவ்வளவு ரூபாய் உயருமோ என்ற அச்சம் இல்லத்தரசிகள் மத்தியில் இருந்து வருகிறது.தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.1,018க்கு விற்பனையாகி வந்தி நிலையில், புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குபவர்களுக்கான டெபாசிட் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

அதன்படி, ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்கியவர்களுக்கு எந்த டெபாசிட் உயர்வும் கிடையாது என்றும், புதிதாக இணைப்பு பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற டெபாசிட் தொகை ரூ.1,450 ஆக இருந்து வந்த நிலையில், நேற்று முதல் புதிய இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தில் ரூ.750 உயர்த்தப்பட்டு, ரூ.2,200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 சிலிண்டர் இணைப்பு பெற வேண்டுமானால் 4,400 ரூபாய் டெபாசிட் செலுத்த வேண்டும்.

அத்துடன், சிலிண்டருக்குரிய ரெகுலேட்டர் விலை 150 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டருக்குரிய முன்பணம் ரூ.800 ஆக இருந்த நிலையில், ரூ.350 அதிகரித்து, 1,150 ரூபாயாக ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கியாஸ் டியூப் மற்றும் பாஸ் புத்தகத்துக்கான கட்டணம் ரூ.150 மற்றும் ரூ.25 தனியாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரியாவு சிலிண்டருக்கான டெபாசிட் கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1,250 ரூபாய் கட்டணத்தில் இருந்து ரூ.200 உயர்த்தப்பட்டு 1,450 ரூபாயாக ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்த விலை உயர்வுவால், பொதுமக்களும், இல்லத்தரசிகளும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

நன்றி

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *