[ad_1]
1. நிதித் திட்டமிடல் என்பது அதிக செலவு வைக்குமா?
நிதித் திட்டமிடல் என்பது அதிக செலவு வைக்கும் விஷயம் என பலர் நினைக்கின்றனர், அப்படி எல்லாம் இல்லை. இந்தியாவை பொறுத்த வரையில் இரண்டு விதமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். முதல் முறையில் நிதித் திட்ட விநியோகஸ்தர்கள் மூலம் முதலீடு செய்யும் போது முதலீட்டாளர் தனியே கட்டணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. அவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் போன்றவை கமிஷன் கொடுத்துவிடுகின்றன. இந்த முறையில் கிட்டத்தட்ட சுமார் 95 சதவிகிதம் பேர் முதலீடு செய்து வருகிறார்கள்.
இரண்டாவது முறையில், செபி அமைப்பில் பதிவு செய்ய கட்டணம் வாங்கும் நிதி ஆலோசகர்கள் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என நிதித் திட்டம் அளித்து கட்டணம் வாங்கிக் கொள்கிறார்கள். இந்தக் கட்டணம் நிலையானது மற்றும் முதலீட்டுத் தொகையில் இத்தனை சதவிகிதம் என்பது போல் இருக்கிறது. குறைவான தொகை முதலீடு செய்பவர்கள் நிலையான கட்டணத்தை தேர்வு செய்யலாம். லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் முதலீடு செய்பவர்கள் சதவிகித கணக்குக்கு போகலாம். இன்றைக்கு வளர்ந்திருக்கும் தொழில்நுட்பம், வெளிப்படை தன்மை மற்றும் அதிக போட்டி போன்றவை நிதித் திட்டமிடலுக்கான கட்டணத்தை மிகவும் மலிவாகி இருக்கிறது.
2. நிதித் திட்டமிடலுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டுமா?
நிதித் திட்டமிடல் மேற்கொள்ள முதல் முறைதான் சில மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும் பிறகு ஆறு மாதத்துக்கு பிறகு அரை மணி நேரம் செலவிட்டால் போகும். இப்போது தொழில் நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்டதால், நிதி ஆலோகருக்கும் முதலீட்டாளருக்கும் பயணச் செலவு மற்றும் பயண நேரம் மிகவும் மிச்சமாகி இருக்கிறது. தொலைபேசி, வீடியோ அழைப்பு, இ மெயில், வாட்ஸ் அப், எஸ்எம்எஸ் என தகவல் தொடர்பு மிகவும் எளிதாகி இருக்கிறது. இப்போது இணைய தளங்கள் மற்றும் மொபைல் செயலி மூலம் முதலீட்டின் வளர்ச்சியை நொடியில் அறிந்து கொள்ளும் வசதி வந்த பிறகு நிதித் திட்டமிடல் நேரத்தை சாப்பிடும் ஒரு விஷயமே அல்ல என்பதை அனைத்து முதலீட்டாளர்களும் உணர்ந்திருக்கிறார்கள்.
3. காப்பீடு பாலிசிகள்
என்னிடம் காப்பீடு பாலிசிகள் இருக்கின்றன. அவை என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றும்..! என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயுள் காப்பீடு பாலிசி குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் இல்லாத போது குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றும் கவசமாக உள்ளது. மருத்துவக் காப்பீடு குடும்ப மருத்துவச் செலவுகளை ஈடுகட்டுவதாக உள்ளது. பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம், சொந்த வீடு போன்ற முக்கிய இலக்குகளை நிதித் திட்டமிடல் மூலம்தான் நிறைவேற்ற முடியும்.
4. நிதி ஆலோசகர்
எல்லாவற்றையும் என் நிதி ஆலோசகர் பார்த்துக்கொள்வார் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் நிதி ஆலோசகர் நிதி திட்டமிடலை அமல்படுத்தும் ஒரு பாலம்தான். அவர் எல்லாமும் அல்ல. பலர் நிதி ஆலோசரை நியமித்து விட்டால் அவர் எல்லா வேலையையும் செய்து முடித்துவிடுவார் என நினைக்கிறார்கள். நிதி ஆலோசகர் உங்களுக்கு பல திட்டங்களை தீட்டித் தரக்கூடும். அதனை அமல்படுத்துவது உங்கள் வேலையாகும். கூடவே முதலீடு தொடர்பான அறிவையும் வளர்த்துக்கொள்வது உங்கள் கடமையாகும். அப்போதுதான் நிதி ஆலோசகர் செய்யும் எல்லாம் சரிதானா என தெரிய வரும். மேலும், நிதி ஆலோசகர் சொல்வதை 100 சதவிகிதம் அப்படியே செய்ய வேண்டும் என்றோ, அப்படியோ பின்பற்ற வேண்டும் என்றோ அவசியமில்லை. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதனை தெளிவுப்படுத்தி அதற்கு ஏற்ப நிதித் திட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். நிதித் திட்டமிடல் ஆலோசனையை நிதி ஆலோசகர் வழங்கினாலும் அதன் இறுதி முடிவை அவருடன் கலந்து ஆலோசித்து முதலீட்டாளர்தான் எடுக்க வேண்டும்.