Slice APP உங்களை உளவு பார்க்கிறது | எச்சரிக்கை விடுத்த கூகுள்

Slice App

[ad_1]

சமீப ஆண்டுகளாக ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பல்வேறு ஆப்ஸ்-களில் இருந்து தனிப்பட்ட விவரங்கள் மற்றும் யூஸர்களின் டேட்டாக்களை நிறுவனங்கள் திருடுவதாக பல புகார்கள் வந்துள்ளதால், பாதுகாப்பு கவலைகள் அதிகரித்து வருகின்றன.யூஸர்களின் கவலைகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக டேட்டாவை திருட முயற்சி மேற்கொள்ளும் தீங்கிழைக்கும்ஆப்ஸ்களை கண்டறிய, கூகுள் நிறுவனம் Google Play Protect மூலம் Play Store-ல் இருக்கும் மில்லியன் கணக்கான ஆப்ஸ்களை அவ்வப்போது ஸ்கேன் செய்கிறது. அந்த வகையில் கூகுள் வழங்கி உள்ள சமீபத்திய எச்சரிக்கைகளின் படி, ஃபின்டெக் நிறுவனமான ஸ்லைஸ் ஆப் (Slice App) யூஸர்களின் தனிப்பட்ட டேட்டாக்களை உளவு பார்க்க முயற்சிப்பதாக கூறி உள்ளது.

ஃபின்டெக் நிறுவனமான Slice, கிரெடிட் கார்டுக்கு மாற்றாக தாங்கள் செயல்படுவதாக கூறி கொண்ட நிலையில், யூஸர்களின் தனிப்பட்ட டேட்டாக்களை உளவு பார்க்க முயற்சிப்பதாக யூஸர்களை கூகுள்எச்சரித்த பிறகு ஸ்கேனரின் கீழ் வந்துள்ளது. Google Play Protect சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள ஆப்ஸ்களை வழக்கமாக ஸ்கேன் செய்கிறது. இதனிடையே businessinsider.in வெப்சைட்டின் அறிக்கை படி, ஜூன் 24 அன்று Google Play Protect ஒரு அறிவிப்பை அனுப்பியது, அதில், “Slice” உங்கள் டிவைஸை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்ற எச்சரிக்கை வந்தது.

ஸ்லைஸ் ஒரு தீங்கிழைக்கும் ஆப் என்றும் மெசேஜ்கள், போட்டோஸ், ஆடியோ ரெக்கார்டிங்ஸ் அல்லது கால் ஹிஸ்ட்ரி போன்ற யூஸர்களின் தனிப்பட்ட டேட்டாக்களை உளவு பார்க்க முயற்சிப்பதாகவும் கூகுள் எச்சரித்தது. எனவே குறிப்பிட்ட இந்த Slice ஆப்-ஐ இன்ஸ்டால் செய்துள்ளவர்கள் உடனடியாக தங்கள் டிவைஸிலிருந்து Slice-ஐ அன்இன்ஸ்டால் செய்யுமாறும் Google Play Protect யூஸர்களுக்கு பரிந்துரைத்தது.

Slice App 1

இதனை அடுத்து Slice-க்கு எதிரான கூகுளின் பரிந்துரை சோஷியல் மீடியாவில் விவாத பொருளானதை தொடர்ந்து, ட்விட்டரில் பிரச்சனை தொடர்பாக தெளிவான விளக்கத்தை அளித்தது நிறுவனம். அதில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாகவும் Slice நிறுவனம் கூறி இருக்கிறது. இது தொடர்பான விளக்க அறிக்கையில் நிறுவனம் கூறி இருப்பதாவது, ” எங்கள் ஆப்-இல் பிரச்சனை இருப்பதாக பிளே ஸ்டோரில் இருந்து ஒரு ரிஸ்க் மெசேஜ் எங்களுக்கு கிடைத்தது.

இதனை தொடர்ந்து நாங்கள் சிக்கல் என்னவென்பதை ஆராய்ந்து அதனை கண்டறிந்து 4 மணிநேரத்திலேயே சரி செய்துவிட்டோம். எங்களது ஆப்-ஐ பயனப்டுத்தும் யூஸர்களில் 1% பேர் இன்னும் முந்தைய வெர்ஷனை பயன்படுத்தி வருகின்றனர். எனவே பழைய வெர்ஷனை பயன்படுத்தி வரும் யூஸர்கள் விரைவாக Slice ஆப்-ஐ அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து மற்றொரு அறிக்கையில். “உங்கள் டேட்டா மற்றும் பிரைவஸியை பாதுகாப்பதில் எப்போதும் போல் ஸ்லைஸ் முழுமையாக ஈடுபட்டுள்ளது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். உங்கள் டேட்டா மற்றும் பிரைவஸியை சமரசம் செய்யும் வகையில் எங்கள் ஆப்-ல் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியளிக்கிறோம்” என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *