[ad_1]
40 வயதில்…
ஒரு ஆணுக்கு 40 வயது ஆகும்போது அவரது தசைகள் சுருக்கம் அடைய தொடங்குகின்றன. ஹார்மோன் மாறுபாடு அதிகரிக்கிறது. புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்க வழக்கங்கள், பாரம்பரிய நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். 40 வயதில் ஆண்களுக்கு ஏற்படக் கூடிய சில பாதிப்புகள் இதோ..
- நீரிழிவு நோய்
- ஹைப்பர்டெப்ன்சன்
- இதய நோய், ஹார்ட் அட்டாக், இதய செயலிழப்பு.
- மன அழுத்தம்,
- விரைவீக்கம்
- மலக்குடல் புற்றுநோய்
- தூக்கமின்மை, குறட்டை
- அதிக கொழுப்புச்சத்து அளவுகள்
- பாலியல் பிரச்சினைகள்
முதல் இடத்தில் இதய நோய்
உலகெங்கிலும் ஆண்டுதோறும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதில் இதய நோய் முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இதய நோய் பாதிப்புகள் மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும் அதிகரித்துவிட்டன. மேலே குறிப்பிட்டுள்ள பல நோய்கள் தடுக்கக் கூடிய ஒன்றுதான் என்றாலும், நீண்ட காலத்திற்கு இவை அறிகுறி இல்லாமலேயே பெருகிவிடக் கூடியது ஆகும்.
அன்புக்குரியவர்களை நாம் இழந்துவிடக் கூடாது என்றால் இதுபோன்ற நோய்களை உரிய காலத்தில் பரிசோதனை செய்து தெரிந்து கொள்வதுடன் மிகச் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.
மன அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து
40 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், அதிக கொழுப்பு அளவுகள் போன்றவை அறிகுறிகள் இல்லாமல் இருக்கும். இது தவிர மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். மலம் கழித்தலில் பிரச்சினைகளை எதிர்கொண்டால் மலக்குடல் புற்றுநோய் தாக்குவதற்கான அபாயம் அதிகம்.
வயது அதிகரிக்கும் விரைப்புத்தன்மை இல்லாமை, ஆண்மைக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். தக்க சமயத்தில் இவற்றை கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- ஆரோக்கியமான உணவு அவசியம் – அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.
- தினசரி உடற்பயிற்சி – வாரத்தில் 5 நாட்களில் மொத்தம் 150 நிமிடங்களுக்கு குறையாமல் உடற்பயிற்சி செய்வது அவசியம். தியானம், யோகா போன்றவையும் பலன் அளிக்கும்.
- புகைப்பிடித்தலை நிறுத்துவது, மது அருந்துவதை கட்டுப்படுத்துவது, இதர போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்ப்பது முக்கியம்.
- அவ்வபோது மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.