[ad_1]
நோக்கியா மொபைல்களை இன்று சந்தையில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. என்னதான் பல புதிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டு சந்தையைப் பிடித்தாலும் நோக்கியாவிற்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. காரணம் அதன் தரமான Build quality தான். அதை இன்றும் தவறவிடாமல் பின்பற்றி வருகிறது நோக்கியா. ஆனால் அதிக விலை, சுமாரான ஃபெர்பார்மென்ஸ் மற்றும் software போன்றவைதான் இதன் பெரிய பிரச்னை. இதனால் வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை நோக்கிய மொபைல்கள் பெறவில்லை.
எனினும் இதன் G சீரியஸ் மாடல்கள் ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நோக்கியா G 11 மாடல் பட்ஜெட் விலையில் நல்ல வசதிகளுடன் வெளியாகியிருந்தது. எனவே இதன் புதிய அப்கிரேடாக நோக்கியா G11பிளஸ் மாடல் பற்றிய சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சார்கோல் க்ரே (Charcoal), லேக் ப்ளூ (Lake blue) ஆகிய இரண்டு நிறங்களில் சொரசொரப்பான டிசைனில் வெளியாகியுள்ளது இந்த புதிய நோக்கியா G11பிளஸ். முன்புறத்தில், 90Hz ரிஃப்ரெஷ் ரேட்-6.51″ HD+ டிஸ்ப்ளே, 8 எம்பி கேமரா. ஆனால் அதே பழைய நாட்ச் டிஸ்ப்ளேதான். பின்புறத்தில், 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. கைரேகைக்கான சென்சார் பக்கவாட்டில் பவர் பட்டனுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுவது 5000 mAh கொண்ட பேட்டரி. இது ஒரே சார்ஜிங்கில் மூன்று நாள்கள் வரை பேட்டரி ஆயுள் வழங்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த G11பிளஸ் ஆண்ட்ராய்டு12 தளத்தின் மேல் இயங்குகிறது. இதற்கான OS அப்டேட்கள் 3 வருடங்களுக்கு வழங்கப்படும் என்றும் வழக்கம்போல மாதம் தவறாமல் பாதுகாப்பிற்காக அப்டேட்களும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது நோக்கியா. இதன் விலை மற்றும் முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.