முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளியாகும், படம் நன்றாக இருந்தால் மக்களால் ரசிக்கப்படும் படம் வெற்றிப் படமாகும். இல்லையேல் அது தோல்விப் படமாகும். அது ஓர் இயல்பான நிகழ்வாய் நடந்துகொண்டு இருக்கும். இப்பொழுதெல்லாம் ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே அதன் பாடலில், படத்தின் போஸ்டரில், கதையில், காட்சியமைப்பில் என ஏதாவது ஒரு வகையில் பிரச்சினை வந்துவிடுகிறது. இதன் காரணமாக ஏதாவது ஒரு தனி நபர் அல்லது இயக்கம், சாதி, இனம், மதம் சார்ந்தவர்கள் வழக்குத் தொடர்வதும், பஞ்சாயத்துக்கள் நடப்பதும் சர்வ சாதாரணமான ஒன்றாகி இருக்கிறது.
ஜெய்பீம், கர்ணன், மெர்சல், தலைவா என இந்தப்பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அந்த வகையில் இணைந்துள்ள புது வரவுதான் புஷ்பா பட த்தில் இடம்பெற்றுள்ள ஊ அண்ட்டாவா… ஊஊ அண்ட்டாவா எனும் தெலுங்குப் பாடல்.
தெலுங்கில் வெளிவந்த பெரும் வெற்றிகண்ட ‘ரங்கஸ்தலம்’ படத்தை இயக்கிய சுகுமார் இயக்கி, அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் ‘புஷ்பா’. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ளன. ரங்கஸ்தலம் படத்துக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத், இந்தப் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். வெளியான அனைத்து பாடல்களும் ஹிட்டாகியுள்ள நிலையில் சமீபத்தில் வெளியானதுதான் ஊ அண்ட்டாவா… ஊஊ அண்ட்டாவா எனும் தெலுங்குப் பாடல்.
இந்தப் பாடல் வரிகள் ஆண்களை வக்கிர மனம் கொண்டவர்களாகவும் காமம் குறித்த சிந்தனை உணர்வு மிக்கவர்களாகவும் சித்திரித்துள்ளதாக ஆந்திராவின் ஆண்கள் அமைப்பு, பாடலின் ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனுக்கு தடை கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்தப்பாடைன் தமிழ் பதிப்புதான் ஓ சொல்றியா…ஓஓ சொல்றியா பாடல். இந்தப்பாடலை எழுதியவர் விவேகா. அந்த முழுப்பாடலையும் கீழே காண்போம்.
சேல சேல சேல கட்னா
குறு குறு குறுனு பாப்பாங்க ,
குட்ட குட்ட கவுனு போட்டா
குறுக்கா மறுக்கா பாப்பாங்க !
சேல பிளவுசு சின்ன கௌனு
ட்ரெஸுல ஒன்னும் இல்லைங்க
ஆசை வந்தா சுத்தி சுத்தி !
அலையா அலையும் ஆம்பள புத்தி
ஓ சொல்றியா மாமா …..
ஓ ஓ சொல்றியா மாமா…….
ஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா மாமா ..
கலரா இருக்கும் பொண்ண பாத்தா
கணக்கு பண்ண துடிப்பாங்க !
கருப்பா இருக்கும் பொண்ண பாத்தா
களையா இருக்குன்னு சொல்வாங்க
கலரோ கறுப்போ மாநிறமோ
நிறத்துல ஒன்னும் இல்லைங்க
சீனி சக்கர கட்டி சுத்தி
எறும்பா திரியும் ஆம்பள புத்தி
ஓ சொல்றியா மாமா
ஓ ஓ சொல்றியா மாமா
ஓ சொல்றியா மாமா
ஓ ஓ சொல்றியா மாமா ..
நெட்டையாக வளந்த பொண்ண
நிமிந்து நிமிந்து பாப்பாங்க ..
குட்டியாக இருக்கும் பொண்ண
குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க
நெட்டைப் பொண்ணோ குட்டைப் பொண்ணோ
திட்டம் எல்லாம் ஒன்னுங்க
தேகம் எல்லாம் மோகம் முத்தி
திருட ஏங்கும் ஆம்பள புத்தி
ஓ சொல்றியா மாமா
ஓ ஓ சொல்றியா மாமா
ஹே , ஓ சொல்றியா மாமா
ஓ ஓ சொல்றியா மாமா …
கொழுக்கா மொழுக்கா வளர்ந்த பொண்ண
கும்முனு இருக்கு சொல்வாங்க
குச்சி உடம்புக்காரி வந்தா
கச்சிதம்னு வழிவாங்க
கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ
சைசுல ஒன்னும் இல்லைங்க
அல்வா மாரி அழகாச் சுத்தி
அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி
ஓ சொல்றியா மாமா
ஓ ஓ சொல்றியா மாமா
ஹே , ஓ சொல்றியா மாமா
ஓ ஓ சொல்றியா மாமா ..
பெரிய பெரிய மனுஷனுனு
ஒரு சிலர் இங்கு வருவாங்க
ஒழுக்கமுன்னா நானே தான்னு
உளறி சிலரு திரிவாங்க
ஒழுக்க சீலன் ஒசந்த மனுஷன்
வெளிய போடும் வேஷம்ங்க
வெளக்க அனைச்சா போதும் எல்லாம்
ம் …ம் …ம் …ம் … வெளக்க அனாச்சா போதும் எல்லாம்
வெளக்கா மாறும் ஒண்ணுதாங்க
ஓ சொல்றியா மாமா
ஓ ஓ சொல்றியா மாமா ..
ஓ செல்வமே பாப்பா -ஹே
ஓ ஓ செல்வமே பாப்பா
ஓ ஓ செல்வமே பாப்பா
ஆண்ட்ரியாவின் குரலில், சமந்தா நடனமாடியுள்ள, ‘ஊ சொல்றியா’ பாடல், கேட்பவரைக் கிறங்க வைக்கிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. பெண்கள் மீது ஆசைகொள்ளும் ஆண்களின் சபலபுத்தி ஏழை, பணக்காரர், பெரிய மனுஷர், ஒழுக்கசீலர் என எல்லோரிடமும் ஒரேமாதிரிதான் இருக்கிறது அதில் எந்த வேறுபாடும் இல்லை என்பதே இந்தப் பாடலின் மையக்கருத்து. அதைக் கொஞ்சம் நக்கலாக, நையாண்டியாக எழுதியிருக்கிறார் அவ்வளவே.
தெலுங்கில் சில அமைப்புகள் இதை எதிர்த்தாலும் தமிழ் மக்கள் இதை வரவேற்கவே செய்கிறார்கள். உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை இப்பாடல் கவர்ந்திருக்கிறது என்பதற்கு பாடல் வெளியாகியுள்ள இந்த குறுகிய காலத்தில் 30 மில்லியன் பார்வைகளைக் கடந்து இணையத்தில் ஹிட்டடித்திருப்பதே இதற்குச் சாட்சி!