[ad_1]
இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டு நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டு நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2-ம் காலாண்டில் நிகர லாபம் 13 ஆயிரத்து 680 கோடி ரூபாய் என்றும், நிகர வருவாய் 1 லட்சத்து 59 ஆயிரத்து 133 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலாண்டில் 12 ஆயிரத்து 273 கோடி ரூபாயாக இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம், செப்டம்பர் காலாண்டில் 46 சதவீதம் உயர்ந்து 13 ஆயிரத்து 680 கோடி ரூபாயாக உள்ளது.
இதைப்போல, நிறுவனத்தின் மொத்த வருவாய் விகிதமானது 1 லட்சத்து 59 ஆயிரத்து 133 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அனைத்து வணிகங்களும் கொரோனாவுக்கு முந்தைய நிலைகளை விட, 2-ம் காலாண்டில் வளர்ச்சியைக் காட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.