அது வேற வாய். இது நாறவாய் – சிரிப்பூட்டும் சீமான்!

seeman-who-changes-opinions

’அது போன மாசம், இது இந்த மாசம்’’ எனும் வின்னர் படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதே போன்ற நகைச்சுவையை அரசியல் களத்தில் நிகழ்த்திக் கொண்டிருப்பவர்தான். முன்னுக்குப் பின் முரணாக தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டு களமாடும் அண்ணனும், அவர்தம் தம்பிகளும் கலவர பூமியை காமெடியாக்கி அனைவருக்கும் ஆசுவாசத்தை ஏற்படுத்துபவர்கள்  என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தங்கம், வெள்ளி விலை நிலவரம் எப்போதும் ஒரே நிலையில் இருக்காது. சொக்கத்தங்கம் சீமானின் கருத்துக்களின் நிலைப்பாடும் அவ்வாறுதான். பெட்ரோல் டீசல் விலையைப்போல இந்த பெருமகனார் சீமானின் கருத்துகளும் கொள்கைகளும் மாறுதலுக்கு உட்பட்டவை. முன்னுக்கு பின் முரணாக பேசுபவர்களை, ஏம்ப்பா சீமான் மாதிரி பேசிட்டு இருக்க எனச் சொல்லும் அளவுக்கு அன்னார் கருத்துக்களை மாற்றி மாற்றி அள்ளித் தெளித்திருக்கிறார். அரை மணி நேர பேட்டியில் கூட இரண்டாவது நிமிடத்தில் இருந்த நிலைப்பாடு இருபதாவது நிமிடத்தில் மாறிவிடுகிறது. காலம் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது பாருங்கள். அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

  1. 2010 களில் கடவுள் இல்லை என்ற கருத்தில் இருந்தவர் சீமான். ‘’பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தவன் கிருஷ்ணன், அவனைத் தூக்கி குண்டர் சட்டத்தில் ஜெயிலில் போட்டு இருக்கணும்’’ என்று பேசிய அண்ணன் 2015ல் முருகன் எங்கள் முப்பாட்டன் என்றும், 2020ல் சிவன் எங்கள் ஆதி பாட்டன் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். சின்ன வயசுல இருந்தே எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றவர், பச்சை துண்டு போட்டு பழனிக்கு பால் காவடி எடுத்தது எல்லாம் அன்னாரின் திருவிளையாடலன்றி வேறென்ன?
  2. ‘ஒரு தமிழன் வேறு மாநிலத்தில போயி போட்டியிட முடியுமா’ என மேடைகளில் முழங்கி, கம்பீரமாய் கர்ஜித்தவர் அண்ணன் சீமான். காலச்சக்கரம் கடும் வேகத்தில் சுற்றியதில், முழங்கியதை எல்லாம் மறந்த அண்ணன் மும்பைக்கு போய் பாஜக வுக்கு ஓட்டு கேட்டார். ஏன் போனீங்க? என்றதற்கு  அங்கு போட்டியிட்டவர் தமிழர் என்று திருவாய் மலர்ந்தது வரலாறு!
  3. அதிகாரம் ஒருவரிடம் குவிந்து விடக்கூடாது, அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் கருத்து முத்துக்களை உதிர்த்தார் சீமான். பிறகொரு நாள் வேறொரு மேடையில் அதிகாரத்தைப் பரவலாக்கும் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்வேன் என்கிறார். நானே வேர் வரைக்கும் தண்ணீர் ஊற்றுவதால் வேறு ஒரு வேலையாள் எதற்கு? நானே நல்லாட்சி தரும்போது, எதுக்கு உள்ளாட்சி.. புஹாஹா எனச் புன்னகை முத்துக்களை உதிர்த்தார்!
  4. 2017 களில் சீமான் தடுப்பூசி தப்பு என்பது சீமானின் கருத்தாக இருந்தது. இன்றும் அதைப் பின்பற்றும் எளிய தமிழ் பிள்ளைகளான தம்பிகள் தங்கள் குழந்தைக்குத்  தடுப்பூசி போடாமல் விட்டதுண்டு. காட்சிகள் மாறுகின்றன, கருத்துக்கள் மாறுகின்றன. சீமானுக்கு மாவீரன் மகனாய் அவதரிக்கிறார், நிலைப்பாடு மாறுகிறது. 2020ல் தன் மகனுக்குத் தடுப்பூசி கட்டாயம் போடுவேன் என்று சொல்கிறார். இன்னும் இந்த சுவர் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ?
  5. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைப் புகழ்ந்து பேசி, அவர் பிரபாகரனுக்கு உதவுவதாகச் சொன்னார், அப்படிச் சொன்ன 2 மாதத்தில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்றார் சீமான். தனக்கு உதவுவதாகச் சொன்னவரை பிரபாகரன் எப்படிக் கொல்வார் என்றும் கேட்டிருந்தார். பிறகு தன்னுடைய நிலைபாட்டில் இருந்து மாறி, அவரை நாங்கள்தான் கொன்றோம் என்று மேடையிலே பேசினார்.
  6. இருளர்களின் மீது நிகழ்த்தப்படும் அநீதியை உலகிற்குக் காட்டிய சூர்யாவை வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டார் சீமான். “ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி கலசம் காலண்டரை காண்பித்தது தவறு; அந்த காட்சியை தவிர்த்திருக்கலாம், அந்தக்காட்சியை பார்க்கத் தவறிவிட்டேன், இல்லையெனில் நானே சூர்யாவிடம் அந்த காட்சியை நீக்க சொல்லி பேசியிருப்பேன்” என்று ஜெய்பீம் பற்றிய தந்து தடத்தை மாற்றினார்!
  7. மேதகு படத்தை எடுக்க விடக்கூடாது தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்றவர், மானமுள்ள தமிழர்கள் எல்லோரும் படத்தை பார்க்கவேண்டும் என பல்டியடித்தார்.
  8. இசுலாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி என்று ஒரு மேடையில் இசுலாமியரை வாழ்த்தி பேசுவது, பிறகு இசுலாம் சகோதரர்களைக் கைவிட்டு இசுலாம் ஓர் அரேபிய மதம், கிறித்தவம் ஓர் ஐரோப்பிய மதம் என்று சங்கத்தமிழன் சீமான், சங்கித்தமிழனாய்ப் பிதற்ற ஆரம்பித்தார்.
  9. ஜக்கி ஒரு திருட்டு பையன் என்று ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தவர் சீமான். ஆதி சிவனின் அருள் பார்வை கிடைத்துவிட்டதோ என எண்ணும் அளவிற்கு, காடு, மலை, யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமிப்புக்கு ஆட்சியாளர்கள்தான் பொறுப்பு என்று  புதிய வழித்தடத்தில் பயணித்தார்!
  10. எல்லாவற்றையும் அரசு எடுத்து நடத்த வேண்டும், விவசாய தொழில் அரசு பணியாக ஆக்கப்படும்னு தேர்தல் அறிக்கை வெளியிட்டவர் சீமான். ஆனால் 100 நாள் அரசு வேலை திட்டத்தில் தொழிலாளிகள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்குகிறார்கள் என்று சொல்வது முரண்பாடுகளின் உச்சம்!

கண்மூடித் தனமாய் கைதட்டும்முன் ஆமைக்கறி, பன்னிக்கறி மற்றும் வீரசாகசக் கதைகளை தாண்டி கொஞ்சம் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஒருகாலத்தில் சீமான் மேல் பைத்தியமாய் இருந்த தம்பிகளில் சிலர், சீமானே பைத்தியம்தானோ என்றும் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சிந்திப்பதுதானே மனிதர்களை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது?!

By சிவ.அறிவழகன்

எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறையில் பணிபுரிபவர். 2009ல் இருந்து இணையத்திலும் தமிழ் இதழ்களிலும் தளையிலா எழுத்தாளராக (Freelance Writer) இருந்துவருகிறார். தமிழ் குறுக்கெழுத்துப்போட்டி படைப்பாளராக பணிபுரிகிறார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *