[ad_1]
இந்திய அரசு, ரிசர்வ் வங்கியின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பல கட்ட சீரிஸ்களில் எஸ். ஜி. பி (SGB) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சாவரின் கோல்டு பாண்டுகளை வெளியிடுகிறது. கடந்த 2021 – 22-ம் நிதியாண்டில் தங்க பத்திரங்கள் மூலம் ரூ.12,991 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பு 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான சாவரின் கோல்டு பாண்டு முதல் சீரிஸ் ஆனது ஜூன் 20, 2022 அன்று தொடங்கவுள்ளது.
ஜூன் 20-ம் தேதி வரை 5 நாட்கள் இந்த தங்க பத்திரங்களை முதலீட்டாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். நடப்பு நிதியாண்டில் இரண்டாவது கட்ட வெளியீடானது ஆகஸ்ட் 22 – 26, 2022 அன்று வெளியிடப்படவுள்ளது. முதல் சீரிஸில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,091-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு முதல் சாவரின் கோல்டு பாண்டு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சாவரின் கோல்டு பாண்டு முதலீட்டுக்கு மக்கள் நல்ல வரவேற்பை வழங்கி வருகின்றனர். இந்த முதலீட்டுத் திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒரு கிராம் தொடங்கி, அதிகபட்சமாக 4 கிலோ வரை ஒரு நிதி ஆண்டில் தனிநபர் முதலீடு செய்யலாம். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு தனிநபருமே அதிகபட்சமாக ஆண்டொன்றுக்கு 4 கிலோ தங்கத்தின் மதிப்புக்கு முதலீடுகளைச் செய்யலாம். அறக்கட்டளையாக இருக்கும்பட்சத்தில் ஒரு நிதி ஆண்டில் 20 கிலோ வரை முதலீடு செய்யலாம்.