தெற்கு டெல்லியில் உள்ள சிராக் டில்லி பகுதியில் நேற்று மைக்ரோவேவ் ஓவனுக்குள் இரண்டு மாத குழந்தை இறந்து கிடந்தது என்று இங்குள்ள போலீசார் தெரிவித்தனர்.
இரண்டு மாத குழந்தை இறந்தது குறித்து மருத்துவமனையில் இருந்து மாலை 5 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்று துணை போலீஸ் கமிஷனர் (தெற்கு) பெனிடா மேரி ஜெய்கர் தெரிவித்தார். குழந்தை ஓவனுக்குள் இருப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்ததாக அவர் கூறினார்.
இந்த சம்பவம் அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் ஜெய்கர் கூறினார்.
“இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் விசாரித்து வருகிறோம்,” என்று கமிஷனர் கூறினார்.
மற்றொரு பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் குழந்தையின் தாய் தான். தாயிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
சம்பவத்தின் போது, குழந்தையின் தந்தை அவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அவர் நடத்தும் பல்பொருள் அங்காடியில் இருந்தார்.
பக்கத்து வீட்டுக்காரர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குழந்தையின் தாய் வீட்டிற்குள் தன்னைப் பூட்டிக் கொண்டதால் எழுப்பப்பட்ட சலசலப்பால் தான் விழித்தேன்.
கண்ணாடியை உடைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தோம். உள்ளே மயங்கிக் கிடந்த பெண்ணைக் கண்டோம் ஆனா குழந்தையை காணவில்லை. நாங்கள் அப்பகுதி முழுவதும் சோதனை செய்தோம், ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், மேலும் இரண்டு மூன்று பேர் வீட்டுக்கு உள்ளே வந்து, ஒவேன் வைக்கப்பட்டிருந்த அறையை சோதனையிட்டபோது, குழந்தை உள்ளே இருப்பதைக் கண்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் கூறுகையில், சிறிது நேரம் அப்பகுதியை சுற்றிப்பார்த்த பிறகு, அவர்களில் சிலர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றனர், அங்கு அவர்கள் ஒரு அறையை கண்டுபிடித்தனர், அங்கு தாழ்ப்பாள் போடாமல் இருணிகத்து. பின்னர் அவர்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.