எளிமைதான் அவரது வலிமை. பந்தா இல்லாமல் எல்லோரிடமும் பழகக்கூடிய தன்மை.
ரசிகர்கள், வேலையாட்கள் மட்டுமல்ல பொதுமக்களிடம் அனைவருக்கும் மரியாதை கொடுப்பதில் அஜித்துக்கு நிகர் அவர்தான்.
முதல்வர் மேடையில் அமர்ந்திருக்க, பலரும் பார்க்க, அவருடைய ஆட்கள் செய்யும் அடாவடித்தனத்தை முதல்வரிடமே எடுத்துக்கூறிய துணிச்சல் எல்லோராலும் பாராட்டப்பட்டது.
8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு சத்தமின்றி உதவி செய்துள்ளார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபோதும் தன் ரசிகர்களைச் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளாத குணம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
பைக், கார் ரேஸ், ஏரோ மாடலிங், துப்பாக்கி சுடுதல், புகைப்படம் எடுத்தல், சமையல், பயணம் என மனதைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்ளும் மகத்தான பண்பு அஜித்துக்கு வாய்த்திருக்கிறது.