நாம் தமிழர் கட்சி – கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

Pic2
மராத்திய மாநில மும்பையில் உள்ள மனித நேயமும் தமிழ் இனம் பற்றாளர்களும் கொடுத்த கஜா புயல் நிவாரணப் பொருட்க்களான 50 மூட்டை அரிசி, 13 மூட்டை பருப்பு, 200 லிட்டர் சமயல் எண்ணெய், 10 பண்டல் பிஸ்கட், 2 பண்டல் மிழகுவர்தி மற்றும் உடைகள் போர்வைகள் உள்ள 2 லட்சம் மதிப்பு கொண்ட உணவு பொருள்களை மாரத்திய மாநில நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மற்றும் தமிழர் நல வாழ்வு மன்றம் சேகரித்து நேற்று இரவு செந்தூர் முருகன் லாரியின் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மட்டத்தில் பாதிக்கப்பட்ட  விவசாய கிராமகளான இதுவரை எந்த நிவாரணமும் பெறாத மனிக்காரன்வடுதி, பத்துபுள்ளிவிடுதி மாற்றம் காரியாவிடுதி கிராமத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.  இந்த நிவாரணப் உணவு பொருள்கள் இந்த மூன்று கிராம மக்களுக்கு ஒரு குடும்பத்தாருக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1லிட்டர் சமயல் எண்ணெய், மிழகுவர்த்தி, உடைகள் அனைத்தும் ஒரு பையில் போட்டு அனைத்து குடும்பத்திர்க்கும் நேரில் சென்று கொடுப்பதற்கு மராத்திய நாமநில நாம் தமிழர் நிவாரண குழு புறப்பட்டது.

நிவாரண குழு விவரம்: முனைவர் பழநி முருகேசன், வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்திரு கொம்பன் இரவி, வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர், இந்த குழு கஜா நிவாரணம் கொடுப்பதற்கு புறப்பட்டது என்பதை அன்போடு உறவுகளுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.


Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version