கடந்த 12 ஆண்டுகளாக கழுத்து 90 டிகிரி வளைந்து கடும் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிக்கு இந்தியாவில் அறுவை சிகிச்சை நடைபெற்று குணமடைந்து தாய் நாடு திரும்பியுள்ளார்.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் 13 வயதான அப்ஸீன் குல் இவர் பத்து மாத குழந்தையாக இருந்த போது இவரது சகோதரியின் கையிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டார் அப்போது கழுத்தில் அடிபட்டதில் 90 டிகிரி ஆக சாய்ந்துவிட்டது. பெற்றோரிடத்தில் முறையான சிகிச்சை அளிக்க வசதி இல்லை இதனால் கடந்த 12 வருடங்களாக வளைந்த கழுத்துடன் மிகவும் அவதிப்பட்டு வந்தார் இந்த சிறுமூலி பெருமூளை பாதிப்பும் இருந்தது இதனால் விளையாடுவோம் அல்லது பள்ளி செல்லவோ கூட முடியாத நிலை இருந்தது சிறுமியின் பரிதாப நிலை குறித்து மீடியாக்களில் செய்திகள் வெளியானது.
இதையடுத்து டெல்லியை சேர்ந்த ராஜ கோபால கிருஷ்ணன் என்ற மருத்துவர் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தார் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து அப்ஸீன் குல் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார் டெல்லி மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது சிறுமி நல்ல முறையில் குணம் அடைந்துள்ளார் சிறுமியின் குடும்பத்தினர் மருத்துவ கோபாலகிருஷ்ணனுக்கு மனதார நன்றி தெரிவித்தனர்.
90 டிகிரி வளைந்த கழுத்தை சரிசெய்த இந்திய மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது