[ad_1]
இந்நிலையில், சில நாள்களுக்கு முன், மூக்கில் ஏதோ அடைத்திருப்பது போல உமைருக்கு தோன்ற, தன் அம்மாவிடம் கூறியிருக்கிறார். அவரின் அம்மா அவரை, மூச்சை வேகமாக வெளித்தள்ளச் சொல்லியிருக்கிறார். மாடிக்கு சென்ற உமைர், தனது இரு காதுகளிலும் பஞ்சை அடைத்துக்கொண்டு, இடது மூக்கை மூடிக் கொண்டு, வலது மூக்கில் காற்றை உள்ளிழுத்து, மிகவும் வேகமாக, அழுத்தமாக வெளியே விட்டுள்ளார். காற்றோடு சேர்த்து வெளியே வந்து விழுந்துள்ளது ஒரு சின்ன நாணயம்.
நாணயத்தை பார்த்து அதிர்ந்து, இது எப்படி தன் மூக்கில் இருந்து வருகிறது என சிந்தித்தவருக்கு, சிறு வயதில் தன் மூக்கில் 5 பென்ஸ் (five-pence) நாணயத்தை அழுத்தி விளையாடிய சேட்டை நினைவுக்கு வந்துள்ளது.
உமைரின் அம்மா, ‘மதிய உணவுக்கு உமைரை அழைத்தபோது, மூக்கில் சிரமமாக உணர்வதாக நீண்ட நேரமாக மூக்கை பிடித்துக் கொண்டு இருந்தான். அதனால் வேகமாக மூச்சை வெளிவிடும் படி சொன்னேன். 15 நிமிடங்கள் கழித்து மாடியில் இருந்து கீழே வந்தவன், 5 பென்ஸ் நாணயம் தன் மூக்கிலிருந்து வந்ததாகச் சொல்ல, அனைவரும் அதிர்ந்து விட்டோம். நிஜமாக தான் சொல்கிறாயா என்பது போல் பார்த்தோம். இது ஒரு விசித்திரமான நிகழ்வு. இதை சற்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதுவரை பல இடங்களில் சிகிச்சை பார்த்துள்ளோம்; ஆனால் மூக்கில் நாணயம் அடைத்திருந்தது கண்டுபிடிக்கப்படவில்லை’ எனத் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், 5 பென்ஸ் நாணயம் இதுபோல் அடைத்துக்கொள்ளும் அளவிலானது, மற்றும் இப்படி நடக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.