பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்ததைப்போல், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் 1000 ரூபாயை நெருங்குகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சரமாரியாக ஏறும்போது பதார்த்தங்களைப் பரிமாறி பசிபோக்குவது எப்படி? வீட்டில் சமைக்கவே பயப்படும் நிலை உருவாகியிருக்கிறது. வீட்டில்தான் இப்படி என்றால் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2,200 க்குமேல் விற்பனையாவதால் உணவகங்களிலும் இந்த விலையேற்றத்தின் விளைவு விபரீதமாகத்தான் இருக்கிறது.
தேநீர் முதற்கொண்டு இட்லி, தோசை, பரோட்டா என எல்லா உணவின் விலையும் தாறுமாறாய் ஏறியிருக்கின்றன. உணவகங்கள் துவங்குவதற்கு வங்கியில் கடன் வாங்கிய காலம் போய் சாப்பிடுவதற்கே கடன் வாங்கும் கடின காலத்தில் வாழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பேங்க் ஆஃப் ‘பரோட்டா’ என்று ஏதாவது ஒரு வங்கி துவங்கி, உணவு உண்ண கடன் தந்தால் நன்றாக இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மூலகாரணம் இந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையேற்றமே என்பதை மறுப்பதற்கில்லை.
சத்தமில்லாமல், புகையில்லாமல் சவுகரியமாய் சமைக்கலாம் என்பது மட்டும்தான் இதில் சிறப்பு. இதன் விலை, அதற்காக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவரும் மானியமும் முறையாகக் கிடைப்பதில்லை என எதுவுமே திருப்திகரமானதாய் இல்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக இல்லங்களுக்குச் சமையல் எரிவாயு சிலிண்டரை டெலிவரி செய்பவருக்கு பில்லில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையைத் தாண்டி கூடுதல் டெலிவரி சார்ஜ் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்..
2020 ல் நடந்த கீழ்க்கண்ட செய்தியை அனைவரும் அறிந்திருக்கலாம். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வினியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் அதற்கு பதில் மனுக்கள் தாக்கல் செய்தன.
அதில் கூறப்பட்டிருந்தது என்னவென்றால், சமையல் எரிவாயு விநியோக உரிமை ஒப்பந்தத்தின்போதே, பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் போது கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்திற்கு வழங்கப்படும் கமிஷன் தொகையில் 20 முதல் 35 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து 4 முறை இந்த முறைகேடுகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால், எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் அளிக்கலாம். விநியோகஸ்தர்கள் சேவையில் திருப்தி இல்லை என்றால் நுகர்வோர் தங்கள் சமையல் எரிவாயு இணைப்பை வேறு நிறுவனத்திற்கும், வேறு விநியோகஸ்தர்களுக்கும் மாற்றிக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அந்த பதில் மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக, விநியோக நிறுவனங்களுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படுவது உண்மையே. ஆனால் இந்தத் தொகையை, பெரும்பாலான விநியோக முகவர்கள் சிலிண்டர்களை டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல், டெலிவரிக்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும்படி, கட்டாயப்படுத்துவதே டெலிவரி சார்ஜ் வாங்குவதற்கான முதன்மை காரணம்.
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு டெலிவரி சார்ஜ் எதுவும் கிடையாது அது இலவசமாகத்தான் விநியோகிக்கப்பட வேண்டும். ஆரம்ப காலகட்டங்களில் நுகர்வோர் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஆரம்பத்தில் கொடுத்து வந்தனர். அது தற்போது தவிர்க்க முடியாத சம்பிரதாயமாக, இயற்றப்படாத சட்டமாகவே ஆகிவிட்டது
நள்ளிரவில் பேருந்து உணவுக்காக நிற்கின்ற மோட்டல்களில் “பில் எவ்ளோப்பா?” என்றால் டிப்ஸையும் சேர்த்துச் சொல்வார்கள், (தோசை 40, டிப்ஸ் 10மொத்தம் 50 ரூபாய்). அதேதான் இந்த சிலிண்டர் டெலிவெரியிலும் நடக்கிறது. டிப்ஸ் கொடுப்பதா, வேண்டாமா, எவ்வளவு கொடுப்பது என்பதையெல்லாம் முடிவுசெய்யும் வாய்ப்பே நுகர்வோருக்கு மறுக்கப்படுகிறது.
சிலிண்டர் போடும் பணி கடினமானதுதான், வெயில், மழை என்று பாராமல் உழைக்க வேண்டிய அவசியம் உள்ள பணிதான் என்பதை மறுப்பதற்கில்லை. அனைவரின் வீட்டிலும் அடுப்பெரிய அவர்களும் ஒருவகையில் காரணமல்லவா? மனிதாபிமானம் உள்ள மக்கள் அனைவரும் பில்லில் குறிப்பிட்ட தொகையைத் தாண்டி அவர்களுக்கு டிப்ஸ் கொடுக்கவே விரும்புவார்கள். ஆனால், கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்படி யாரேனும் டெலிவரி சார்ஜ் கேட்டு நுகர்வோரைக் கட்டாயப்படுத்தினால், நுகர்வோர் சட்ட ரீதியாக வழக்கு தொடரலாம். அதற்கு சட்டத்தில் இடம் உண்டு” என்பதையும் அவர்கள் உணரவேண்டும்!
what is the cost of cialis Bnvovt Bppcyb cialis levitra ou viagra internet Cialis Lidbog Propecia Minox Rogaine oscialipop.com – Cialis Find Secure Ordering Levaquin Pills Direct Cash Delivery Brukwf