ஒயின் என்பது பழங்கள் கொண்டு தயரிக்கப்பட்ட பழங் கள். நாள் செல்லச் செல்லத்தான் ஒயினுக்கு மதிப்பு கூடும் என்பார்கள். ஒயின் தொடர்பாக மதுப்பிரியர்களின் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் செய்தி ஒன்று மஹாராஷ்டிராவில் நடந்திருக்கிறது. அது என்ன என்று பார்ப்போம்.
மகாராஷ்டிராவில் தற்போது மதுக்கடைகளில் மட்டுமே ‘ஒயின்’ விற்கப்பட்டு வருகிறது. ஒயினைச் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் ‘ஒயின்’ பாட்டில்களை விற்பனை செய்ய மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறைந்தபட்சம் 100 சதுர மீட்டர் மற்றும் அதற்கும் மேற்பட்ட வசதிகளை உடைய இடங்களில் ‘ஒயின்’ விற்பனை செய்யலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே விற்பனை செய்யக்கூடாது என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதேபோல மதுவிலக்கு அமலில் உள்ள மாவட்டங்களிலும் கடைகளில் மதுவிற்பனை செய்ய முடியாது. இதேபோல ஒயின் விற்பனை செய்ய கடைகள் அரசுக்கு ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.
பழச்சாறு மூலம் தயாரிக்கப்படும் ஒயின் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், இந்த முடிவு எடுத்துள்ளதாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இது விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிக்கும் முயற்சி என்றும் கூறப்படுகிறது. விவசாயிகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக மஹாராஷ்டிர அரசு தரப்பில் கூறப்படுகிறது.
மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. கடைகளில் ஒயின் விற்கும் மாநில அரசின் முடிவுக்கு அன்னா ஹசாரேயும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.