Renault கார்களில் அதிரடி தள்ளுபடிகள், சலுகைகள்: ரூ. 94,000 வரை சேமிக்கலாம்

232708 renault

[ad_1]

ரெனால்ட் கார்களில் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்: நீங்கள் ஒரு புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தால், ஜூன் மாதத்தில் உங்களுக்கு இதற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஜூன் மாதத்தில் ரெனால்ட் இந்தியா அதன் க்விட் ஹேட்ச்பேக், கிகர் காம்பாக்ட் எஸ்யுவி மற்றும் ட்ரைபர் எம்பிவி ஆகியவற்றில் தள்ளுபடியை வழங்குகிறது.

இது தவிர, பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் இந்தியாவில் தனது தயாரிப்புகளுக்கான ஆன்லைன் முன்பதிவை பெறுவதோடு, வாகனங்களை ஹோம் டெலிவரியும் செய்கிறது. இருப்பினும், இது புதிய விஷயம் அல்ல, பல கார் தயாரிப்பாளர்களும் இதைச் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெனால்ட் க்விட்

ரெனால்ட்-இன் நுழைவு-நிலை சலுகையான க்விட் ஹேட்ச்பேக், ரூ. 82,000 மதிப்புள்ள மொத்த சலுகைகளுடன் கிடைக்கிறது. இதில் ரூ. 35,000 வரையிலான பொது நன்மைகள், ரூ. 37,000 வரை சிறப்பு லாயல்டி நன்மைகள் மற்றும் ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும். ரெனால்ட் க்விட் விலை ரூ.4.62 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

ரெனால்ட் கிகர்

கிகர் ரெனால்ட் நிறுவனத்தில் அதிக விற்பனையான காராகும். பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனலட் ரூ.55,000 சிறப்பு லாயல்டி நன்மையையும், ரூ.10,000 கார்ப்பரேட் தள்ளுபடி அல்லது கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு சிறப்புப் பலனையும், ஸ்கிராப்பேஜ் பாலிசியின் கீழ் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் நன்மையையும் வழங்குகிறது. மொத்தத்தில், 75,000 மதிப்புள்ள மொத்த சலுகைகள் இதில் உள்ளன. இதன் விலை 5.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

ரெனால்ட் ட்ரைபர்

ரெனால்ட் ட்ரைபர் ரெனால்ட் நிறுவனம் மூலம் வழங்கப்படும் 7-சீட்டர் எம்பிவி ஆகும். இது சப்-4 மீட்டர் பிரிவில் வருகிறது. இந்த ஜூன் மாதத்தில், ரெனால்ட் நிறுவனம் இந்த காரில் ரூ. 40,000 வரையிலான சாதாரண பலனையும், ரூ. 44,000 வரை சிறப்பு லாயல்டி நன்மையையும், ஸ்கிராபேஜ் பாலிசியின் கீழ் ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் வழங்குகிறது. இதில் மொத்தம் ரூ.94,000 வரை சலுகைகள் கிடைக்கின்றன.

Source

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version