Electric scooter without license in India | லைசென்ஸ் இல்லாமல் ஓட்டக்கூடிய வாகனங்களின் பட்டியல்

234728 escooter

[ad_1]

லைசென்ஸ் இல்லாமல் ஓட்டக்கூடிய வாகனங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. ஆம், லைசென்ஸ் இல்லாமல் ஒரு சில வாகனங்களை இயக்கலாம். அதிகபட்ச வேகம் 25 கி.மீ வேகம் கொண்ட வாகனங்களை லைசென்ஸ் இல்லாமல் ஓட்டலாம். அந்த வாகனங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஜாய் இ-பைக் மான்ஸ்டர்

ஜாய் இ-பைக் மான்ஸ்டர் எலக்டிரிக் பைக் விலையைக் கேட்டாலே உங்களை கிறுகிறுக்க வைத்துவிடும். இந்த வண்டியின் விலை ரூ.1,10,000. இது 250 kW ஹப் மோட்டாரில் இயங்கக்கூடிய இந்த ஸ்கூட்டர், லித்தியம்-அயன் பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கும். இவை தவிர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், அலாய் வீல் மற்றும் பின்புற மோனோ-ஷாக் போன்ற அம்சங்களும் உள்ளது. இந்த பைக்கை ஓட்டுவதற்கு லைசென்ஸ் தேவையில்லை.

ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் E2

லைசென்ஸ் இல்லாமல் ஓட்டக்கூடிய மற்றொரு ஸ்கூட்டர் ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் E2. 48-வோல்ட் 28 Ah லித்தியம்-அயன் பேட்டரியை கொண்டு, 250-வாட் மின்சார மோட்டாரில் இயங்கும். அதிகபட்சமாக 25 kmph வேகத்தில் செல்லும் இந்த ஸ்கூட்டரின் எடை வெறும் 69 கிலோ மட்டுமே. ரூ.59,099-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஹாப் லியோ

பல்வேறு அம்சங்களைக் கொண்ட எலக்டிரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று ஹாப் லியோ. USB சார்ஜிங், ஆட்டோமேட்டிக் பார்க்கிங் உதவி, ரிமோட் கீ, சைட் ஸ்டாண்ட் சென்சார், ஆன்ட்டி-தெப்ட் அலாரம் மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்சங்களுடன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 முதல் 125 கிமீ வரை பயணிக்கலாம். ஓட்டுநர் உரிமம் தேவையில்லை.

ஜான்டி ப்ரோ

ஜான்டி ப்ரோ எலெக்ட்ரிக் வண்டியில் எலக்ட்ரானிக் உதவியுடனான பிரேக்கிங் சிஸ்டம், சூப்பரான ஹெட் லேம்ப்கள் மற்றும் அலாய் வீல்கள் போன்ற அம்சங்கள் இருக்கும். 249 W மின்சாரம் கொண்டு இயக்கப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். அதிகபட்ச வேகம் என்பது மணிக்கு 25 கிலோமீட்டர் செல்லும். முழுவதுமாக சார்ஜ் ஆவதற்கு 6 மணி நேரம் எடுத்து கொள்ளும்.

ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா E5

ஹீரோ எலக்ட்ரிக் ஆப்டிமா இ5 ஸ்கூட்டர் 250-வாட் மின்சார ஹப் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இதில் லித்தியம்-அயன்/லெட்-அமில பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. நான்கு முதல் 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ்ஜாகி விடும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 55 கிலோமீட்டர் தூரம் செல்ல முடியும். மணிக்கு 42 கிலோமீட்டர் அதிகபட்ச வேகத்தில் செல்லக்கூடியது.

Source

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version