தாராவியில் மனைவியை கொன்று விபத்து என நாடகமாடிய கணவர் கைது

crime dont cross

மும்பை தாராவி பகுதியை சேர்ந்தவர் ராகுல் ஜெய்ஸ்வால் (வயது27) இவரது மனைவி ரோஷினி (வயது22) இவர்களுக்கு 2 வயது மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த ரோஷனியை கணவர் ராகுல் ஜெய்ஸ்வால் சயான் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது ரோஷினி வீட்டின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக ராகுல் ஜெய்ஸ்வால் டாக்டரிடம் கூறினார்.

இந்த நிலையில் இளம்பெண் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் இளம்பெண் ரோஷினிக்கு உள் காயங்கள் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது எனவே டாக்டர்கள் இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் அடைந்தனர்.

இதையடுத்து போலீசார் ரோஷினியின் கணவர் ராகுல் ஜெய்ஸ்வாலிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கொலை வழக்கில் கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ராகுல் ஜெய்ஸ்வாலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ரோஷினி சந்தேகப்பட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என தெரிவித்தார்.

Source: Mumbai Today Tamil News

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version