கோரேகான் மேற்கு பகுதியில் 1000 ஏழை குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது

கொரோனா ஊரடங்கு சிக்கல்களால் மும்பை, கோரேகான் மேற்கு பகுதியில் வசிக்கும்  ஏராளமான ஏழை குடும்பங்கள் அத்தியாவசிய உணவுப்  பொருட்கள் இன்றி தவிப்பதை   கோரேகான் தமிழர் நலக் கூட்டமைப்பு கிளை அமைப்பாளர்  வி.எம்.சுவாமி பிள்ளை, நிர்வாகி எஸ்.பி. குமரேசன் ஆகியோர் கூட்டமைப்பின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் இரா. தமிழ்செல்வன் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் உடனடியாக மாநகராட்சி உறுப்பினர் திருமதி கலா பிள்ளை மற்றும்  தமிழர் நலக் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு வழங்க முன்வந்தார். 
நேரடியாகவே நிவாரண உதவிகள் தேவைப்பட்ட ஏழை குடும்பங்களை சட்டமன்ற உறுப்பினர்  கேப்டன் இரா. தமிழ்செல்வன், மாநகராட்சி உறுப்பினர் திருமதி கலா பிள்ளை,  வி.எம். சுவாமி பிள்ளை, எஸ்.பி. குமரேசன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசிய நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினர். கேப்டன் இரா. தமிழ்செல்வன் தலைமையில் தமிழர் நலக் கூட்டமைப்பு  நிர்வாகிகள் மும்பை புறநகர் பகுதிகளில் ஏராளமான மக்களுக்கு  தொடர்ந்து நல உதவிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version