கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் (22) என்ற மாணவர், 21 Dec இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்ட பிறகு, மாணவர் ஹேமச்சந்திரன் தனது அறைக்குச் சென்று தூங்கியுள்ளார். ஆனால், இன்று காலை அவர் அசைவில்லாமல் இருப்பதை கண்ட சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் ஹேமச்சந்திரனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூகத்திற்கான செய்தி
இச்சம்பவம் இரவில் பரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. இரவில் பரோட்டா போன்ற அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்வது, இரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகரித்து, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் கூட்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, இரவில் அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
COIMBATORE NEWS
இரவில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் மாரடைப்பால் பலி