ஒருபுறம், பாகிஸ்தான் அரசு உலகம் முழுவதும் இந்தியாவுக்கு எதிராக விஷத்தை கக்கி வருகிறது. அதே நேரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானின் மிகவும் முக்கியமான நபர்கள் பலர் பிரதமர் மோடியின் ரசிகர்கள் ஆகி வருகின்றனர். பாகிஸ்தான் மக்களும் இப்போது பிரதமர் நரேந்திர மோடியை உரக்க குரலில் புகழ்ந்து வருகின்றனர். ஆகஸ்ட் 15 அன்று, பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையை ஆற்றினார், இது இப்போது எல்லா இடங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தானிலும் கடும் பாராட்டுக்கள் குவிந்து வருவதுதான் சிறப்பு. இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு பாகிஸ்தான் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக இருந்த அப்துல் பாசித், ஒரு தலைவர் இதுபோன்ற செயல்களைச் செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் அப்துல் பாசித் கூறுகையில், இந்தியாவில் சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி சிறந்த பேச்சாளர் என்றும், அரசியல் கூட்டங்களில் அவர் பேசுவது எப்போதும் கலகலப்பாக இருக்கும் என்றும் கூறினார்.
பிரதமர் மோடியின் இந்த உரையில் வழக்கம் போல் நாட்டு மக்களுக்காக புதிய விஷயங்கள் கூறப்பட்டதாக அப்துல் பாசித் கூறினார். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளரும் நாடு பட்டியலில் இருந்து வெளியேறி வளர்ந்த நாடாக உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி ஊழல் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்தும் பேசியதாக அப்துல் பாசித் கூறினார். பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து பேசிய விதம் அருமையாக இருந்ததாகவும், ஒரு தலைவர் இப்படிதான் பேச வேண்டும் என்று பாசித் மேலும் கூறினார். சமீபத்தில், பாகிஸ்தான் லாகூரில் நடந்த பேரணியின் போது, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் பிரதமருமான இம்ரான் கானும் இந்தியாவின் சுதந்திர வெளியுறவுக் கொள்கையை பாராட்டினார். இம்ரான் கான் தனது பேரணியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் வீடியோவை லட்சகணக்கான பாகிஸ்தானியர்கலுக்கு போட்டு காண்பித்துள்ளார். பின்னர் இம்ரான் கான் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரையும் பாராட்டினார். அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கியதாக இம்ரான் கான் கூறினார். மோடி அவர் நாட்டு மக்களுக்கு இதன் பயனை கொண்டு சேத்ததாகவும் இது சுதந்திர நாட்டின் அடையாளம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.