மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே, மசூதிகளில் தொல்லை தரக்கூடிய ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3 காலக்கெடுவில் உறுதியாக இருப்பதாகக் கூறினார். ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடந்த ஒரு பொது பேரணியில் உரையாற்றிய தாக்கரே, “மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3 காலக்கெடுவிற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன்” என்றார்.
மே 4 முதல் அனைத்து இந்துக்களும் ஹனுமான் சாலிசாவை மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளின் அளவை விட இரட்டிப்பாக இசைக்க வேண்டும் என்று எம்என்எஸ் தலைவர் கூறினார். முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால், நாங்கள் அவர்களுக்கு மகாராஷ்டிராவின் சக்தியைக் காட்டுவோம்,” என்று அவர் கூறினார்.
ஒலிபெருக்கி சத்தம் என்பது மதப் பிரச்சினை அல்ல, சமூகப் பிரச்சினை என்றார். எல்லா ஒலிபெருக்கிகளும் (மசூதிகளின் மேல்) சட்டவிரோதமாக ஒளிக்கபடுகிறது. இவ்வளவு ஒலிபெருக்கிகள் பயன்படுத்தி அங்கு கச்சேரி செய்கிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரபிரதேச அரசால் ஒலிபெருக்கிகளை அகற்ற முடிகிறது என்றால், தனது உறவினரான உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசாங்கத்தால் முடியாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ராஜ் தாக்கரே.