ரயில் நிலையம் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5 ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கி உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது, 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாடு முழுவதும் 199 முக்கிய ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக தமிழகத்தில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் எக்மோர் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களை தவிர மற்ற ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கி உள்ளதாகவும் எழும்பூர் கன்னியாகுமரி ரயில் நிலைய பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுபோக கும்பகோணம், திருநெல்வேலி, சென்னை டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல், தாம்பரம், ஆவடி, கோவை ஆகிய ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து வருவதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.