வாழ்வதற்கு காற்று தேவை ! அதற்கு மரங்கள் தேவை !!

0e940077 4528 450c bfc3 8dcf7e10a1c5

மண்ணை உழுபவருக்கு பெண் கொடு –
மரத்தை நடுபவருக்கு விருது கொடு –

பொது வேலையில் ஈடுபட சொல்லி கொடு –
பொது சேவை செய்பவருக்கு புகழ் கொடு –

தண்ணீரை சேமிக்க  சொல்லி கொடு –
தாமதித்தால் பாலைவனமாகும் என சொல்லிவிடு

தாய் தந்தைக்கு நல்லதை செய் –
அவர்கள்
தளர்ந்த பின் நீ தளராமல் செய் –

உனக்காக ஒரு மரம் வை –
உன் குடும்பத்திற்காக ஒரு பத்து மரம் வை –
இதை உன் சொந்தங்களையும் செய்யச் சொல்லி வை –

பிள்ளை பிறந்தாலும் மரம் வை –
பேர் வைத்தாலும் மரம் வை –
மகள் பெரியவள் ஆனாலும்
மரம் வை –
நாட்டுக்காக நாலு நூறு மரம் வை –

இச்செயலை நண்பர்களையும் செய்ய சொல்லி  வை –

இதை ஊராரிடமும் சொல்லி வை –

பசுமையை பற்றி சொல்லிக்கொடு –
அதை உருவாக்க இப்பவே முயற்சியை  எடு –

வாழ்வதற்கு
காற்று தேவை – அதற்கு
மரங்கள்  தேவை –
இதுவே நமக்கும், தலைமுறைக்கும்  தேவை –

குளத்தை வெட்டி  வை –
மரத்தை நட்டு வை –
நிலத்தை உழுது வை –
தண்ணீரை சேமித்து வை –

பல்லுயிரும் செழிக்க
பசுமை ஆகும் என்று சொல்லிவை!!!!
நல்லவைகளை முற்பகல் செய்யின்….பிற்பகல் விளையும்…..
அல்லவைகளை முற்பகல் செய்யின்….முற்பகலே விளையும்….

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version