தனிமையில் பெண்கள் இதைதான் கூகுளில் அதிகம் சர்ச் செய்கிறார்கள்

232779 girls

[ad_1]

கூகுள் தான் அதிகம் பயன்படுத்தப்படும் தேடுபொறி ஆகும். உங்கள் மனதில் ஏதேனும் கேள்விகள் இருந்தால், ஏதேனும் சந்தேகம் இருந்தால், கூகுளில் தேடிப் பார்த்து விடை பெறலாம். ஒவ்வொரு கேள்விக்கும் கூகுள் பதில் அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கூகுள் தனது தேடல் முடிவு அறிக்கையை வெளியிடுகிறது. அதன்படி கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் பெண்களின் இணைய பயன்பாடு குறித்த பல சுவாரஸ்யமான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. அந்த வகையில் நாட்டில் உள்ள சுமார் 150 மில்லியன் இணைய பயனர்களில், இந்தியாவில் சுமார் 60 மில்லியன் பெண்கள் இந்த கூகுள் தேடலை உபயோகம் செய்கின்றனர். எனவே அறிக்கையின்படி, மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் இதில் பெண்கள் கூகிளில் தேடுவது அதிகம் சுவாரஸ்யமானது.

ஒரு அறிக்கையின்படி, ஆண்களைப் போலவே பெண்களும் தங்களுக்கு தேவையான, அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு இணையத்தை தான் முதலில் பயன்படுத்துகின்றனர். வேலை வாய்ப்பு, உடல் பருமன், அழகு குறிப்புகள் உள்ளிட்ட விஷயங்களை பொதுவாக தேடும் பெண்கள், இன்னும் சில விஷயங்களை கூடுதலாக அதிகம் கவனம் கொடுத்து தேடுகின்றனராம். இந்த விஷயம் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக ஈர்ப்பு
அதேபோல் இந்த கூகுள் தேடுதலில், பெண்கள் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிலும் ஆடை வடிவமைப்புகள், புதிய சேகரிப்புகள் மற்றும் சலுகைகளை போன்றவற்றை அதிகம் தேடுகின்றனர்.

அழகு குறிப்புகளுக்கு இணைய உதவி:
பெண்கள் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்க விரும்புகிறார்கள். இதற்கு இணையத்தின் உதவியை அவர்கள் அதிகம் நாடுகின்றனர். இந்த கூகிள் தேடுதல் மூலம் பெண்கள் ஃபேஷன், போக்குகள், அழகு சிகிச்சைகள் மற்றும் வீட்டு வைத்தியம் பற்றி அறிய விரும்புகிறார்கள்.

மருதாணி டிசைன்:
பெண்கள் மருதாணி கையில் போட்டுக்கொள்வதை அதிகம் விரும்புவார்கள். இதற்கு அழகான டிசைனை தேர்வு செய்ய பெண்கள் பெரும்பாலும் கூகுளில் தேடுகிறார்கள்.

ரொமாண்டிக் பாடல்கள்:
பொதுவாக பெரும்பாலோருக்கு இசை கேட்பது பிடிக்கும். ஆனால் பெண்கள் அதிகம் தேடும் விஷயங்களில் இசையும் ஒன்று. அதன்படி இந்த தேடுதலில் பெண்கள் ரொமாண்டிக் பாடல்களைக் கேட்கிறார்கள்.

இதற்கிடையில் இந்த தகவல்களைத் தவிர, தொழில் தொடங்குவது எப்படி?, வாழ்க்கையில் சாதிப்பது எப்படி?, பெண்களுக்கு சமுதாயத்தில் இருக்கும் வாய்ப்புகள் குறித்த தகவல்களையும் குறைந்த அளவில் தேடி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version