2 ஆண்டு வாரன்டியுடன் இந்தியாவில் போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை & சிறப்பு அம்சங்கள்

817900

[ad_1]

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது போக்கோ F4 5ஜி ஸ்மார்ட்போன். இரண்டு ஆண்டுகள் உத்தரவாதத்துடன் வெளிவந்துள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம் தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வருகிறது போக்கோ. மொத்தம் நான்கு சீரிஸ்களில் போன்களை வெளியிட்டு வருகிறது. இதில் F சீரிஸ் வரிசையில் இப்போது இந்திய சந்தையில் F4 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

F4 5ஜி சிறப்பு அம்சங்கள்

  • இந்தியாவில் மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்டுகளில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி+128ஜிபி, 8ஜிபி+128ஜிபி மற்றும் 12ஜிபி+256ஜிபி என வெவ்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வசதியை கொண்டுள்ளது இந்த போன்.
  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டு காலம் வாரண்டியும் வழங்கப்படுகிறது.
  • 6.67 இன்ச் திரை அளவை கொண்டுள்ளது இந்த போன். 120hz ரெப்ரெஷ் ரேட் உடன் E4 சூப்பர் AMOLED டிஸ்பிளே. கொரில்லா கிளாஸ் 5 புரொட்டக்ஷனை கொண்டுள்ளது.
  • குவால்காமின் ஸ்னாப்டிராகன் 870 புராசஸர், 5ஜி கனெக்டிவிட்டியை கொண்டுள்ளது இந்த போன்.
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் 64 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா. 20 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா.
  • 4500mAh திறன் கொண்டுள்ளது இதன் பேட்டரி. 67 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்டும் கொண்டுள்ளது.
  • வரும் 27-ஆம் தேதி முதல் விற்பனையாக உள்ளது. இதன் விலை 6ஜிபி: ரூ.27,999, 8ஜிபி: ரூ.29,999 மற்றும் 12ஜிபி: ரூ.33,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version