ஊதியம், வரி  மற்றும் இதர விதிகள்… ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு மாறப் போகும் விஷயங்கள் குறித்து தெரிந்த தகவல்கள்…

Indian Money 1

[ad_1]

மத்திய அரசு அமல்படுத்தும் புதிய தொழிலாளர் நல கொள்கைகள் காரணமாக ஜூலை 1ஆம் தேதி முதல் பல்வேறு விஷயங்கள் மாற இருக்கின்றன. ஊழியர்களுக்கான ஊதியம், பிஎஃப் விகிதம், விடுப்பு விதிகள் உள்ளிட்டவை மாற்றம் அடைகின்றன. அதேபோல புதிய வரி விதிப்பு கொள்கைகளும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. அதில் மிக முக்கியமான விஷயங்களை இந்த செய்தியின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

ஊதியம், பணி நேரம் மாற்றம்

புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் புதிய ஊதியக் கொள்கை ஆகியவற்றை ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்துகிறது. இதன்படி வாரத்தில் 4 நாட்கள் 12 மணி நேர வேலை மற்றும் 3 நாள் விடுப்பு மற்றும் வாரத்தில் 5 நாட்கள் 8 மணி நேர வேலை மற்றும் 2 நாள் விடுப்பு என்ற திட்டமுறை கடைப்பிடிக்கப்பட இருக்கிறது.

இது தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதிய விகிதத்தை உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால், இனி கைக்கு வந்து சேரும் ஊதியம் குறைவாக இருக்கப் போகிறது. அதே சமயம், பிஎஃப் திட்ட பங்களிப்பில் அதிக தொகை சேரும்.

23 மாநிலங்களில் அமல்

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய தொழிலாளர் நலக் கொள்கைகளை மொத்தம் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அமல்படுத்த இருக்கிண்றன. இதற்கான வரைவு விதிகளை இந்த மாநிலங்களின் அரசுகள் வெளியிட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவையில் மத்திய தொழிலாளர் மற்றும் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ராமேஷ்வர் தேலி அளித்த பதிலில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஏ அலோவன்ஸ்

ஜூலை மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான டிஏ அலோவன்ஸ் தொகை வழங்கப்பட இருக்கிறது. ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை என இரண்டு தவணைகளில் டிஏ வழங்கப்பட்டு வருகிறது. பணவீக்கத்திற்கு தகுந்தாற்போல டிஏ அலோவன்ஸ் தொகையை அரசு அதிகரிக்கிறது.

டிடிஎஸ் விதி மாற்றம்

ஜூலை 1ஆம் தேதி முதல் சமூக வலைதள செல்வாக்குள்ளவர்கள் மற்றும் மருத்துவர்கள் ஈட்டும் வருவாய்க்கும் டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான விதிமுறைகளை மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

கிரெடிட் கார்டுகளுக்கு டோக்கன்

கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு ஆக்டிவேஷன் தொடர்புடைய விதிகளுக்கு டோக்கன் முறையை வழங்குவதற்கு ஜூன் 30ஆம் தேதியில் இருந்து 3 மாத கால கால நீட்டிப்பை ரிசர்வ் வங்கி வழங்குகிறது.

டேட்டா ஸ்டோரேஜ் விதிகள்

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான டேட்டா ஸ்டோரேஜ் விதிகளை அமல்படுத்துவதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் கால நீட்டிப்பு வழங்கும் உத்தரவை ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

பிபிஐ விதிகள்

நாட்டில் உள்ள அனைத்து வங்கிசாரா ப்ரீபெய்டு பேமெண்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் வழங்குநர்கள் சார்பில் ப்ரீபெய்டு கார்டுகளுக்கான புதிய இன்ஸ்ட்ரூமெண்ட்களை லோடிங் செய்வதற்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.

வாடிக்கையாளர் பாதுகாப்பு

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி கடந்த ஆண்டு டோகனைசேஷன் விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஜூலை 1ஆம் தேதி முதல் இது அமலுக்கு வர இருந்த நிலையில் தற்போது 3 மாத கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரே தேசம், ஒரே ரேசன் அட்டை

நாடு முழுவதிலும் ஒரே தேசம் ஒரே ரேசன் அட்டை திட்டத்தை மத்திய அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை கடைசியாக செயல்படுத்திய மாநிலம் அஸ்ஸாம் ஆகும். வாடிக்கையாளர்களுக்கு பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கு பிறகு பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

அனைவருக்கும் வீடு திட்டம்

ஏழை மக்களுக்கு 2.7 கோடி கான்கிரீட் வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் கடந்த 2016ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரையிலும் 1.8 கோடி வீடுகள் கட்டி முடித்து பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

நன்றி

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version