வயதான பின்பு கை நிறைய பென்சன் வாங்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!

jpg 15

அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றிவிட்டு, ஓய்வு பெறுகிறவர்கள் நிறுவனம் மூலம் கிடைக்க கூடிய வைப்பு நிதித் தொகை, பணிக்கொடை மற்றும் பிற ஓய்வூதிய நிதிகளை வைத்தே தங்களது இறுதி காலத்தை மகிழ்ச்சியாக கழிக்க திட்டமிடுகின்றனர். ஆனால் இதை மட்டும் கொண்டு ஒருவர் வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் வழக்கமான வருமானத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடுவது என்பது தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றதாக இருக்காது. எனவே, ஓய்வுக்குப் பிந்தைய முதலீடுகள், வழக்கமான வருமானத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வரிப் பொறுப்பைக் குறைப்பதைத் தவிர பணத்தின் பாதுகாப்பையும் பணப்புழக்கத்தையும் உறுதி செய்வதில் உதவுகிறது.

ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் ஓய்வு காலத்தை திருப்தியாக கவனிக்க உதவும் சில முதலீட்டு விருப்பங்கள் குறித்து கீழே விளக்கியுள்ளோம்

1. பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா (PMVVY):

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC), பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா (PMVVY) திட்டம் என்பது 60 வயது மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும். பிரதான் மந்திரி வயா வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்கள் 10 ஆண்டுகள் வரையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கால அளவைப் பொறுத்து ஓய்வூதியம் பெறலாம். அதாவது மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என நான்கு கால அளவுகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம். . 60 வயதுக்கு மேற்பட்ட எவரும் PMVVY இல் அதிகபட்சமாக ரூ.15 லட்சத்தை (மனைவியுடன் சேர்த்து ரூ. 30 லட்சம்) டெபாசிட் செய்யலாம். PMVVY ஆண்டுக்கு 7.40% உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குகிறது. இதன் காலம் 2020 மார்ச் 31 வரை இருந்த நிலையில், தற்போது மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2. சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (SCSS):

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமானது (SCSS) ஐந்தாண்டு கால அளவைக் கொண்டுள்ளது, இந்தத் திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் ஒன்றிற்கும் மேற்பட்ட கணக்குகளை கூட திறக்கலாம், ஆனால் அனைத்து கணக்குகளையும் சேர்த்து முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சம் மட்டுமே ஆகும். SCSS இல் முதலீடு செய்வது பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளுக்குத் தகுதியுடையது மற்றும் திட்டமானது முன்கூட்டியே திரும்பப் பெறுவதையும் அனுமதிக்கிறது. ஆனால் முன்னதாகவே முடிக்கப்படும் கணக்கிற்கான வரிச்சலுகை திரும்ப பெறப்படும். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கும்.

3. ஃப்ளோட்டிங் வட்டி விகித சேமிப்பு பத்திரம்:

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை வட்டி செலுத்துகிறது. ஃப்ளோட்டிங் வட்டி விகித சேமிப்புப் பத்திரத்திற்கான வட்டி வட்டி விகிதமானது ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாறக்கூடியது என ரிசர்வ் வங்கி குறிப்பிடுகிறது. இது வரிக்குட்பட்ட சேமிப்புப் பத்திரமாகும். இந்தச் சேமிப்புப் பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான எந்த உச்சவரம்பும் கிடையாது, குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். ஏழு வருடங்களுக்குப் பிறகே இந்த முதலீடானது திரும்பக் கிடைக்கும். முதியவர்கள் தங்களது முதலீட்டை இடையிலேயே எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

4. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS):

POMIS என்பது கூட்டு உரிமையின் கீழ் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், ஒற்றை உரிமையின் கீழ் ரூ.4.5 லட்சமும் கொண்ட 5 ஆண்டு முதலீடு ஆகும். வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது ஆண்டுக்கு 6.6%, மாதந்தோறும் செலுத்தப்படும். வட்டி விகிதம் முழு காலத்திற்கும் நிலையானதாக இருக்கும். POMIS இல் பெறப்படும் வட்டியானது ஒரு தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படலாம் மற்றும் தபால் அலுவலகத்தில் உள்ள தொடர் வைப்புத்தொகைகளுக்கு நிதியை மாற்றிக்கொள்ளலாம்.

5. ஃபிக்சட் டெபாசிட் (FD):

வங்கி ஃபிக்சட் டெபாசிட் (FD) எனப்படும் நிலையான வைப்புத்தொகை மீதான வட்டி விகிதங்கள் சுமார் 6.5% ஆகும், இது வருங்காலங்களில் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய கால ஃபிக்சட் டெபாசிட் முதிர்ச்சியடையும் போது, ​​நீண்ட காலத்திற்கு அதைப் புதுப்பித்து, முதிர்ச்சியடையும் காலம் வரை சேமிக்கலாம். மூத்த குடிமக்கள் தங்கள் வைப்புத்தொகைக்கு ஆண்டுக்கு 0.5% கூடுதல் வட்டியைப் பெறுகிறார்கள், சில வங்கிகள் குறிப்பிட்ட காலக்கெடுவில் அதிக விகிதங்களை வழங்கும் சிறப்பு வைப்புத்தொகைகளை வழங்குகின்றன. வரியைச் சேமிக்க விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு, ஐந்தாண்டு வரி சேமிப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version