What Is 500 Internal Server Error And Why does this happen in So Many Websites

Cloudflares servers

[ad_1]

கடந்த வாரம் இணைய தளத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு பிரச்சனையை லட்சக்கணக்கான யூசர்கள் எதிர்கொண்டனர். 500 இன்டெர்னல் சர்வர் எரர் என்பதுதான் அந்த பிரச்சனை. பொதுவாக இது ஒரு வலைத்தளத்தின் சர்வரில் பிரச்சினை ஏற்பட்டால் அந்த வலைதளத்தை யூசரால் பார்க்க முடியாது. ஏதாவது ஒரு வலைத்தளத்திற்கு அதன் சர்வரில் ஏதாவது கோளாறு இருந்தால் அந்த நிறுவனம் அதை சரிசெய்தவுடன் அந்த வெப்சைட் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும். ஆனால் சில நாட்களுக்கு முன்பு ஒரே சமயத்தில் பல பெரிய வலைத்தளங்களில் இந்த இன்டர்னல் சர்வர் எரர் என்ற பிழை செய்தியை லட்சக்கணக்கான யூசர்கள் ஒரே நேரத்தில் பார்த்தனர். வலைதளங்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு செயலிகளும் இதனால் பாதிக்கப்பட்டன.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த அந்த நிறுவனமே தனிப்பட்ட சர்வர்களை பயன்படுத்தி வந்தன. தற்பொழுது இணைய பயன்பாடு மற்றும் யூசர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பெரும்பாலான நிறுவனங்கள் கிளவுடில், கன்டன்ட் டெலிவரி நெட்வொர்க்கில் தங்கள் சர்வரை இணைத்துள்ளன. அதாவது ஒரே சர்வரில் பல நிறுவனங்கள் தங்கள் வெப்சைட்களை டெவலப் செய்து அதன் டேட்டாவை சேகரித்து, விநியோகித்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் வெப்சைட்டுக்கும் தனித்தனியாக சர்வர் என்பது கிடையாது.

கிளவுட் சேவைகளை பல பெரும் நிறுவனங்கள் உலகம் முழுவதும் வழங்கி வருகிறது. அத்தகைய ஒரு டெலிவரி நெட்வொர்க் தான் கிளவுட்ஃபேர். இந்த கிளவுட்ஃபேர் என்பது ஒரு கன்டன்ட் டெலிவரி நெட்வொர்க் ஆகும். இந்த கன்டன்ட் டெலிவரி நெட்வொர்கில் ஏற்பட்ட ஒரு சிக்கல் காரணமாக அதன் சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் கிளவுட்ஃபேரின் சேவையை பயன்படுத்தி வரும் பல வெப்சைட்களும் பாதிக்கப்பட்டன.

யூசர்கள் இந்த பிழைச் செய்தியைப் பற்றி புகாரை அறிவிப்பதற்கு முன்பு வரை இது பெரிய விஷயமாக கவனிக்கப்படவில்லை. ஒரே நேரத்தில் பல்வேறு யூசர்களும் பாதிக்கப்பட்டதால், இதனை ஒரு தீவிரமான பிரச்சனையாகக் கருதி உடனடியாக புகார் செய்தனர். அதே போல கிளவுட்ஃபேர் நிறுவனமும் இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்தது.

கிளவுட்ஃபேர் என்பது கன்டன்ட் டெலிவரி நெட்வொர்க் என்று ஏற்கனவே கூறப்பட்டது. கன்டன்ட் டெலிவரி நெட்வொர்க் என்பது ஒரு சர்வரின் நெட்வொர்க் தொகுப்பிலிருந்து உலகம் முழுவதும் இருக்கும் பல்வேறு சர்வர்களில் கனெக்ட் ஆகி, உள்ளடக்கம் மற்றும் தரவை அனுப்பும்.

இப்படி ஒரு பிழை செய்தியை நீங்கள் ஏதேனும் ஒரு வலை தளத்தில் பார்க்கும் பொழுது உங்களால் எதுவும் செய்ய முடியாது. இது சர்வரில் ஏற்பட்டுள்ள சிக்கல் என்பதால் சர்வரில் அந்த பிரச்சனை தீர்ந்தால் தான் வெப்சைட் செயல்படும்.

ஆனால், சில நேரங்களில் உங்கள் கணினியில் இருக்கும் ‘கேச்சே’ காரணமாகவும் இத்தகைய பிழைச் செய்தியை காணலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களுடைய பிரௌசர் செட்டிங்ஸ்சை கிளியர் செய்துவிட்டு மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாம்.

கிளவுட்ஃபேர் பிழையைப் பொறுத்தவரை என்ன நடந்தது என்று இதுவரை வெளிப்படையாக நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரு கிரிடிகல் P0 இன்சிடென்ட் என்று மட்டும் நிறுவனத்தின் வலைத்தளத்தில் அறிவித்திருந்தது.

Source

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version