இந்தியாவில் அறிமுகமானது சியோமி பேட்டரி ரீப்ளேஸ்மென்ட் புரோகிராம் ஆரம்ப விலை ரூ.499

813767

[ad_1]

இந்திய பயனர்களுக்காக பேட்டரி ரீப்ளேஸ்மென்ட் புரோகிராமை (திட்டம்) அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். இதன் மூலம் தங்கள் போன்களில் பேட்டரியை மாற்ற விரும்பும் பயனர்கள் அதை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது சியோமி. இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது இந்நிறுவனம்.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள தங்கள் நிறுவன போன்களை பயன்படுத்தி வரும் பயனர்களுக்காக பேட்டரி ரீப்ளேஸ்மென்ட் புரோகிராமை அறிமுகம் செய்துள்ளது சியோமி. இதன் மூலம் பயன்பெற விரும்பும் பயனர்கள் அருகில் உள்ள சியோமி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சியோமி மற்றும் ரெட்மி போன் பயனர்கள் பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சியோமி இந்திய தலைமை ஆப்பிரேட்டிங் அதிகாரி உறுதி செய்துள்ளார்.

பேட்டரி தொடர்பான சிக்கலை எதிர்கொண்டு வரும் பயனர்கள் தங்கள் போன்களில் பேட்டரிகளை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீங்கிய பேட்டரி, சார்ஜ் செய்தும் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்காதது, பேட்டரி திறன் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வரும் பயனர்கள் இதன் மூலம் பயன்பெறலாம்.

இப்போது சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் பெரும்பாலான போன்களின் பேட்டரி இன்-பில்ட் வகையில் வருவதனால் பயனர்கள் அதை தனியே பிரித்து எடுப்பது கொஞ்சம் சவாலான காரியம்.

இத்தகைய சூழலில் சியோமி மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. போனின் மாடலை பொறுத்து பேட்டரியின் விலையில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரியை மாற்றுவதற்கான ஆரம்ப விலை ரூ.499 என தெரிவிக்கப்பட்டுள்ளது. போன்களின் மாடல்களை பொறுத்து பேட்டரியின் விலையில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் ஆன்லைன் மூலமாக இந்தியாவில் சியோமி நிறுவன சர்வீஸ் சென்டர் அமைந்துள்ள விவரத்தை அறிந்து கொள்ளலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. விரைவில் ரெட்மி நோட் 12 போனை சியோமி அறிமுகம் செய்யும் என தகவல்.

Source

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version