நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் 5 யோகா போஸ்கள் | சர்வதேச யோகா தினம் 2022

yoga 2 1

[ad_1]

பருவநிலை மாற்றம் பல நோய்களையும் சீர்கேடுகளையும் கொண்டு வருகிறது. இதைத் தடுக்க, உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை வலுப்படுத்த வேண்டும். யோகா செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது பலருக்குத் தெரியாது. மனதோடு, உடலையும் வலுவாக வைக்க வீட்டிலேயே யோகா மேட்டை விரித்து, ஆசனங்கள், பிராணயாமா அல்லது தியானம் செய்யத் தொடங்குங்கள். மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியின் கூடுதல் நன்மையை உங்களுக்கு வழங்கும் சில ஆசனங்களை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை போக்கவும் சிறந்த 5 போஸ்கள் இங்கே..

1. சலபாசனம்/வெட்டுக்கிளி போஸ்:

  1. குப்புறப்படுத்து வயிற்றை நன்றாக அழுத்தி படுத்துக்கொள்ளுங்கள்.
  2. கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும்.
  3. நேராக முதுகு மற்றும் பாதங்களை நீட்டிக்கொள்ளவும்.
  4. மூச்சை உள்ளிழுத்து கைகளை நன்றாக தரையில் உன்றி, கால்களை நேராக உயர்த்தவும்.
  5. தலை மற்றும் மார்பை முடிந்தவரை தரையில் இருந்து தூக்குங்கள்.
  6. இந்த நிலையில் 10 விநாடிகள் செய்யவும்.

இது மலக்குடல் தசைகள், குடல்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

2. தடாசனம்/மலை போஸ்:

தடா என்றால் மலை, மலை போல் உயர்ந்து நிற்பதால் இது தடாசனம் என அழைக்கப்படுகிறது. தடாசனா, நரம்பியல் அமைப்புக்கு நன்மை பயக்கும் என்று நன்கு அறியப்பட்ட, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மிகவும் திறமையான யோகா ஆசனங்களில் ஒன்றாகும். இது தொடை மற்றும் மூட்டு நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கான சிறந்த யோகா தோரணைகளில் ஒன்றாக இருப்பதைத் தவிர, இது உங்கள் தொப்பை மற்றும் உடல் தசைகளை வடிவமைக்கவும் உதவும். தடாசனம் அடிக்கடி செய்து வந்தால், வளரும் ஆண்டுகளில் உங்கள் உயரத்தை மேம்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

  1. நீங்கள் நிமிர்ந்து நிற்கும் போது உங்கள் முதுகை நேராகவும், உங்கள் கால்களை ஒன்றாகவும் வைக்கவும்.
  2. உங்கள் உள்ளங்கைகளை ஒன்றாகக் கொண்டு வந்து, இப்போது அவற்றை இணைக்கவும்.
  3. மூச்சை உள்ளிழுத்து, உங்கள் உள்ளங்கைகளை கீழே எதிர்கொள்ளும் வகையில் கைகளை உயர்த்தவும்.
  4. 5-10 வினாடிகள் இதே நிலையை தொடரவும், பின்னர் கைகளை மெதுவாக கீழே இறக்கி, மூச்சை வெளியே விடவும், குதிகால்களை நார்மலாக வைத்து இயல்பு நிலைக்கு திரும்பலாம். இதனை 4 அல்லது 5 முறை செய்யலாம்.

3. ஆஞ்சநேயாசனம்/லோ-லஞ்ச் போஸ்: 

நோய் எதிர்ப்பு சக்திக்கான சிறந்த யோகா நிலைகளில் சில உடல் மற்றும் மனம் இரண்டிலும் கவனம் செலுத்துகின்றன. ஆஞ்சநேயாசனம் அத்தகைய யோகாசனங்களில் ஒன்றாகும். தசைகள் மற்றும் மூட்டுகள் இரண்டிலும் ஒரே நேரத்தில் வேலை செய்வதால் நோய் எதிர்ப்பு சக்திக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது ஒரு வலுவான யோகா ஆசனமாகும், இது சமநிலையை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் முழங்கால்களில் பெரும் விளைவைக் கொண்டிருக்கிறது. இது பொதுவாக மூட்டு அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுவதால், நோய் எதிர்ப்பு சக்திக்காக யோகா பயிற்சி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இது நிரூபிக்கிறது.

  1. முதலில் யோகா மேட் மீது 2 கால்களையும் நீட்டி உட்கார்ந்து கொள்ளவும்.
  2. பின்னர், உங்கள் இடது காலை பின்னால் வைத்து, முழங்கால் மற்றும் கால் விரல்களை தரையில் உன்றிக் கொள்ளவும்.
  3. உங்கள் வலது முழங்கால் உங்கள் வலது கணுக்காலுக்கு இணையாக உள்ளதா என சரிபார்க்கவும்.
  4. உங்கள் இடுப்பை வளைத்து, இரண்டு கைகளையும் ஒன்றாக இணைத்து உயர்த்தவும்.
  5. தற்போது உடலை பின்னோக்கி வளைக்கவும்.
  6. இவ்வாறு 10 முதல் 20 வினாடிகள் வரை உட்கார்ந்து விட்டு பின்னர் படிப்படியாக பழைய நிலைக்கு வர வேண்டும்.

4. தனுராசனம்/வில் போஸ் : 

தனுராசனம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் யோகா ஆகும். இது ஒரு சிறந்த மன அழுத்த நிவாரணியாகும், ஏனெனில் இது செரிமான மண்டலத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் வெள்ளை இரத்த அணுக்களின் ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

தனுராசனா உங்கள் வயிற்றில் அழுத்தத்தை கொடுத்து, இது உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மிகவும் பயனுள்ள யோகா நிலைகளில் இதுவும் ஒன்றாகும்.

  1. குப்புறப்படுத்து வயிற்றை நன்றாக அழுத்தி படுத்துக்கொள்ளுங்கள்.
  2. உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் உள்ளங்கைகளால் உங்கள் கணுக்கால்களைப் பிடிக்கவும்.
  3. உறுதியான பிடியைப் பராமரித்து, உங்கள் கால்களையும் கைகளையும் முடிந்தவரை உயர்த்தவும்.
  4. முகத்தை கொஞ்சம் மேலே பார்த்தபடி உயர்த்திக்கொள்ளுங்கள். வயிற்றுப்பகுதி தரையில் அழுந்தி இருக்க உடல் வில் போல் வளைய வேண்டும். சுவாசம் இயல்பாக இருக்க வேண்டும்.

5. உட்கடாசனம்/நாற்காலி போஸ்:

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் யோகா ஆசனங்கள் என்று வரும்போது, ​​உட்கடாசனம் முக்கிய இடம் பிடிக்கிறது. உடலை நாற்காலி போல் வைத்து செய்யப்படும் இந்த ஆசானம் உள் சக்தியை ஊக்குவிக்கும் அதே வேளையில் முதன்மையாக வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

  1. உங்கள் முழங்கால்களை வளைத்து, ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பது போல, உங்கள் இடுப்பைப் பின்நோக்கி நகர்த்தவும்.
  2. தோள்பட்டையை இலகுவாக்கி, காதுகளை ஒட்டிய படி கைகளை மேல் நோக்கியபடி உயர்த்தவும்.
  3. 5-10 முறை சுவாசத்தை நன்றாக உள்ளிழுத்து வெளியே விடும் வரை இந்த நிலையை தொடரவும்.
  4. பின்னர் மெதுவாக கைகளை கீழே இறக்கி இயல்புநிலைக்கு திரும்பவும்.

Source

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version